வெலிகடை சிறை அரசியல் கொலையின் 35வது வருட நினைவு நாள் அஞ்சலி

0
303

கதிரவன் திருகோணமலை

வெலிகடை சிறை அரசியல் கொலையின் 35வது வருட நினைவு நாள் அஞ்சலி திருகோணமலையிலும் நிகழ்த்தப்பட்டது.

திருகோணமலை ஒல்லாந்தர் குடா கடற்கரை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள வெலிகடை தியாகிகள் மண்டபத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை 2018.07.25 மாலை இது நினைவுகூரப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாக செயலாளர் நித்தியானந்தன் தலைமையில் இது நடைபெற்றது. திருகோணமலை நகர சபை உறுப்பினர் தி.பவித்திரன், திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தி தலைவர் சி.நவரெத்தினம் மற்றும் ஆர்வலர்கள் இணைந்து 6.35 மணிக்கு நினைவுச்சுடரினை ஏற்றி வைத்தனர்.