ஏறாவூர் நகர்ப் பிரதேச சமுக சேவை அலுவலக உத்தியோகத்தர்களின் பெயர், பதவி பெறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகள் கையளிப்பு…

0
470

 

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் சமூகசேவைகள் அலுவலக உத்தியோகத்தர்களினது பெயர் மற்றும் பதவிநிலை என்பன பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகைகள் ஏறாவூர் சமுக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தினால் நேற்;று வழங்கி வைக்கப்பட்டது.

இப்பெயர்ப் பலகைகளினை ஏறாவூர் சமுக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் விசாரணை அதிகாரியுமான ஐ.எம்.தஸீர் அவர்களினால் ஏறாவூர் நகர்ப் பிரதேச சமுக சேவைகள் உத்தியோகத்தர் நஜிமுதீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது ஒன்றியத்தின் செயலாளர் நபீர், உபசெயலாளர் றிஸ்வி, பொருளாளர் நளீம் மற்றும் மௌலவி இம்சாத் உட்பட ஒன்றிய உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.