வாகரையில் ஊர்காவல் துறையினருக்கு காணி.தடுத்துநிறுத்தக்கோரி யோகேஸ்வரன் எம்.பி கடிதம்.

0
193

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில் ஊர்காவல் துறையினருக்கு காணி வழங்கும்செயற்பாட்டை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரை பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கன்று நடுவதற்காக ஊர்காவல் துறையினர் 25 ஏக்கர் காணி கோரி விண்ணப்பித்துள்ளதாக அறிகின்றேன்.

இச்செயற்பாடுகள் மாகாண காணி ஆணையாளரின் ஆலோசனையில் இடம்பெறுகிறது. ஊர்காவல்துறையினருக்கு காணி இங்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை.தேவை எனில் அவர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம் இங்கு இவர்கள் ஏன் காணி கோரவேண்டும். அத்தோடு இவர்களுக்கு இப்போது தொழில் மரம் நடுகை தொழிலா என சந்தேகிக்க தோன்றுகின்றது.

உண்மையில் இதில் ஏதோ ஒரு இன ரீதியான திட்டம் அமைந்துள்ளது. எனவே எமது மாவட்ட மக்கள் பலர் காணி இன்றி கஸ்டப்படும் நிலையில் இவர்களுக்கு காணி வழங்க முடியாது. ஆகவே பிரதேச செயலகம் இதற்கு காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என கோருகின்றேன், பதிலை எதிர்பார்க்கின்றேன் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.