ஞா.ஸ்ரீநேசன் பா.உ அவர்களினால் தொழில் தேர்ச்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

0
474

மட்டக்களப்பு தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்அவர்களின் சிபாரிசுக்கமைவாக கைத்தொழில் வணிக அமைச்சினூடாக சுமார் 50 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கடந்தவாண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன.அவர்களின் தொழிலுக்குரிய உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மண்முனை வடக்குபிரதேசத்திற்குட்பட்ட 5 தொழில் தேர்ச்சியாளர்களுக்கு  அண்மையில்  தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டது.இதன்போது தையலாளர்களுக்கான தையல்  இயந்திரங்களும் வழங்கப்பட்டது.இவற்றின் மூலமாக சுயதொழில் வாய்ப்பினை அதிகரிப்பதுடன் ஏனையவர்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் ஞா.ஸ்ரீநேசன் கேட்டுக்கொண்டார்.இதில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் து.மதன் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.