ஒரு கிராமத்திற்கான ஒரேயொரு வீதியின் அவலநிலை! சம்மாந்துறைப்பிரதேசசபை கவனிக்குமா?

0
120
ஒரு கிராமத்திற்குச்செல்லும் ஒரேயொரு பிரதானவீதி குன்றும்குழியுமாக போக்குவரத்திற்கு பொருத்தமில்லாத அவலநிலையிலுள்ளது.
இந்த அவலநிலை மல்வத்தையிலுள்ள தம்பிநாயகபுரக் கிராமத்திற்குச் செல்லும் வீதியில் நிலவுகின்றது.
கல்முனை அம்பாறை பிரதானவீதியிலுள்ள மல்வத்தைச் சந்தியிலிருந்து இந்த ஒரேயொரு வீதியூடாகவே தம்பிவிநாயகபுரத்திற்குச் செல்வர்.
அந்த வீதி இன்று படுமோசமாக உள்ளதென மக்கள் தெரிவிக்கின்றனர். அந்தவீதியிலுள்ள ஆலயக்குருக்கள் சிவஸ்ரீ பரமலிங்கம் ஜயாவும் இந்தவீதியின் அவலநிலை பற்றி விபரித்தார்.
வீதியில் சில இடங்களில் பாறைகளும் உள்ளன. அதனால் பயணிக்கமுடியாமலுள்ளது.
இப்பிரதேசத்தை உள்ளடக்கிய சம்மாந்துறைப்பிரதேசசபை இதனைக் கவனிக்குமா? என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனா