நாட்டின் முன்னேற்றத்திற்காக கூட்டுறவுத்துறையை மன உறுதிப்பாட்டுடன் சக்தி மிக்கதாக மாற்றியமைக்க வேண்டும்..

0
295

 மட்டக்களப்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு.

(க.விஜயரெத்தினம் )
நாட்டில் உள்ள அனைவரும் மன உறுதிப்பாட்டுடன் கூட்டுறவுத்துறைக்கு ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.கூட்டுறவுத்துறையை சக்தி மிக்கதாக மாற்றியமைக்கவேண்டும்.கூட்டுறவுத்துறையை அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் சிறப்பாக கவனித்து,அதனை சிந்தித்து செயற்படவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு – வெபர் மைதானத்தில் 96 ஆவது சர்வதேச கூட்டுறவுதினம் சனிக்கிழமை(7.7.2018) பிற்பகல் 2.00 மணியளவில்   நடைபெற்றபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக  கலந்துகொண்டு பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விழாவில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஜ்,அமைச்சர்களான ரிசாட் பதியுதீன்,பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எம்.அமீரலி,அலிஷாஹிர் மௌலானா,நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ,ஸ்ரீயாணி விஜய விக்கிரசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம ,கூட்டுறவுத்துறை அதிகாரிகள்,அமைச்சுக்களின் செயலாளர்கள்,மத்தலைவர்கள்,அரச உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.இதன்போது கூட்டுறவு கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

தொடர்ந்து பேசுகையில் :-நானும் கூட்டுறவுத்துறையில் ஆரம்பகால அங்கத்தவராக இருந்து கூட்டுறவுத்துறைக்கு பணியாற்றினேன்.அதன்பின்பு அமைச்சராக இருந்து கூட்டுறவுத்துறைக்கும், நாட்டுக்கும் பங்களிப்பு செய்தேன்.நாட்டில் உள்ளஅனைவரும் கூட்டுறவுத்துறைக்கு அளப்பெரிய சேவையை ஆற்ற வேண்டும்.கூட்டுறவுத்துறையில் இருக்கின்றவர்கள் ஒருமித்த தலைமைத்துவத்துடனும்,கொள்கையுடனும் செயற்பட்டால் நாட்டின் நலன்கருதி கூட்டுறவுத்துறை முன்னேறும்.

கூட்டுறவுத்துறை நாட்டுக்கு நல்லது செய்கின்றது.கூட்டுறவுத்துறையில் இருப்பவர்கள் தங்களைப்பற்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும்.மனிதபிமானக் கொள்கையுடன் கூட்டுறவைக் பேணவேண்டிய தேவையாகும்.வேலைநிறுத்தம் என்று நான் சொல்லவில்லை. உண்மையாகவும்,நாட்டுக்கும் விசுவாசியாகவும் செயற்படவேண்டும் எனத்தெரிவித்தார்.