25வாகனங்களில் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் ரதபவனி

0
457
சகா)
 
சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 67வது குருபூஜையையொட்டிய ரதபவனி  நேற்று (6) வெள்ளிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
 
இன்று மாலை 6மணியளவில் இவ்வதபவனி நிறைவுக்குவரும்.
 
அதற்காக ரதபவனி இடம்பெறுகின்ற  காரைதீவு வீதியெங்கும் அழகாக சோடனைசெய்யப்பட்டிருந்தது. கொம்புச்சந்தியில் பாரிய அலங்காரப்பந்தல் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கு விசேடவரவேற்பு இடம்பெற்றது.
 
வழிநெடுகிலும் மக்கள் சித்தர் பவனியை நிறைமுட்டிவைத்து வரவேற்றார்கள். பாடசாலை மாணவர்களும் வரவேற்றனர்.
25 உழவு இயந்திரங்களில் சித்தர் பக்தர்கள் நந்திக்கொடியுடன் பயணிக்க பின்னே ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமிகளின் திருவுருவப்படம் தாங்கிய ரதம் பவனிவந்தது கண்கொள்ளாக்காட்சியாகவிருந்தது.
 
காலையில் சித்தராலயத்தில் விசேடபூஜையுடன் ரதபவனி 7.45மணியவில் ஆரம்பமாகியது. நூற்றுக்கணக்கான சித்தர் பக்தர்கள் உழவுஇயந்திரங்களிலும் ரிப்பரிலும் நந்திக்கொடியுடன் பயணிக்கின்றனர்.
 
காரைதீவிலிருந்து காலை 7.45மணியளவில் ஆரம்பமாகிய இவ் ரதபவனி கல்முனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி நாவிதன்வெளி வேப்பையடி ஊடாக மண்டுரைச்சென்றடையவுள்ளது.
 
இடையில் ஆலயங்களில் விசேடபூஜை ஏற்பாடாகியிருந்தது. அம்பலத்தடிப்பிள்ளையார் ஆலயத்தில் பக்தர்களுக்கு காலை ஆகாரம் வழங்கப்பட்டது.
 
பின்னர் பிற்பகில்  வேப்பையடி வீரமுனை சம்மாந்துறையூடாக காரைதீவை வந்தடைய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
காரைதீவு ஸ்ரீசித்தானைக்குட்டி ஜீவசமாதி ஆலயமும் இந்துசமய விருத்திச்சங்கமும் இணைந்து ரதபவனிக்கான ஏற்பாட்டைச்செய்திருந்தது.