காணாமல் போனவர்களுக்கான அலுவலகமானதுசட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும்.இதற்கு சிவில் அமைப்பக்கள் ஒத்துழைக்க வேண்டும்

0
357

பொன்ஆனந்தம்

காணாமல் போனவர்களுக்கான அலுவலகமானது மனித உரிமைகள் ஆணைக்குழுபோன்று சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும்.

அதனைபாதுகாத்து பணிகளை முன்னெடுக்க சிவில் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.என காணாமல்போனோருக்கான அலுவலகத்தின் தெளிவுபடுத்தல் கூட்டத்தில் அதன்தலைவர் சாலிய பீரிஸ்தெரிவித்தார்.

திருகோணமலை இந்துகலாசாரமண்டபத்தில் நடந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் சிவில் அமைப்புக்களையும்,ஊடகவியலாளர்களையும் தெளிவு படுத்தும் சந்திப்பில் அவர்மேற்படி கருத்தைவெளியட்டார்.

இக்கூட்டம் காலை 9.00மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றன.

முதலில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின்உறவுகளுடனான கூட்டம் மண்டபத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகவியலாளர்களைத்தெளிவுபடுத்தும் கூட்டம் 12.45 மணியளவில் இடம்பெற்றன. அதன்பின்னர் சிவில் அமைப்புக்களின் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது பலசந்தர்பங்களிலும் நடைமுறையில் உள்ள பிரதம மந்திரி, ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் காணாமல்போனோர் தொடர்பான முன்னுக்கு பின்முரணான கருத்துக்கள் மக்கள் மத்தியில் இவ்வலுவலகம்தொடர்பான நம்பிக்கைதன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மட்டுமன்றி கடந்த கால ஆணைக்குளுக்களுக்குநடந்த முடிவுகளும். இதனைமேலும் உறுதிசெய்துள்ளது. இதனாலே அதிகமான மக்கள் அவநம்பிக்கையுடன் இருப்பதுடன் சர்வதேச விசாரணைகளையும் கோருகின்றனர். என்பதனை கூட்டத்தின்போது பலமட்டங்களிலும் சுட்டிக்காட்டினர்.

இதுபற்றி பதிலளிக்கின்றபோதே தலைவர் பிரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களையும் சிவில் அமைப்புக்களையும் தெளிவு படுத்தும் நான்காவது கூட்டம் இதுவாகும். நாம் சென்ற பல இடங்களிலும் இவ்வாறான சந்தேகங்கள் எழுப்பட்டதனை நாம் உணர்கின்றோம்.

அண்மையில் உயர்நீதிமன்ற நீதியரசரின்விடயத்தில் சிவில் அமைப்புக்கள் சிறந்த பங்களிப்பினை வழங்கியிருந்தனர். அதனால் அவ்விடயம் வெற்றியளித்தது.

இந்த அலுவலகத்தின் ஆணையாளர்களை ஜனாதிபதி அவர்கள் நியமித்தாலும் கூட இது மனித உரிமைகள் ஆணைக்குழுபோன்று சட்டரீதியான சுயாதீன அமைப்பாகும்.

இது பலமாக செயற்படவேண்டுமாக விருந்தால் சிவில் அமைப்புக்களின் பங்களிப்பும் ஆதரவும் எமக்கு நிற்சயம்தேவையாகவுள்ளது.

அதனால் மேலும் 12 பிராந்திய அலுவலகங்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் 8 அலுவலகங்கள்வடகிழக்கில் அமைக்கப்படவுள்ளன.

இது முன்னைய எல்.எல்ஆர்சிபோன்ற ஆணைக்குழுக்கள் அல்ல இது நிரந்தரமாக செயற்படவுள்ள அலுவலகங்கள்.இதனை மேலும் பலப்படுத்தி செயற்படுத்தவதற்கான பங்குபற்றுதல்களை சிவில் அமைப்புக்கள் வழங்க முடியும்.

நாம் கூட்டங்களை நடாத்திய மாத்தறை, முல்லைத்தீவு உள்ளிட்ட பலபிரதேசங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் அவலங்களை நாம்கேட்டறிந்தோம். அவற்றை எவரும் பரிந்துகொள்ளாத நிலமை உள்ளது.

இன்று காலை இந்த மண்டபத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கானவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் நாம் சந்தித்து அவர்களது கருத்தக்களைக்கேட்டோம்.

முல்லைத்தீவிலும் அவ்வாறு மக்கள் போராடினார்கள். நாம் அவர்களது போராட்டத்தை நிறுத்த சொல்லமுடியாது. ஆனால் எமது அலுவலகம் உடன் முடிவெடுக்கமுடியாது.

உதாரணமாக மன்னார் நெல்களஞ்சியசாலை புதைகுழி விடயத்தில் எமது பிரிவினரும் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறான விடயங்களிலும் நாம் பங்களிக்கமுடியும். இன்றும் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களில் தமிழ், முஸ்லீம்,சிங்கள மக்களின் உறவினர்களும் அதிகளிவில் வந்திருந்தனர்

இது தமிழ் மக்களின் பிரச்சனை மட்டுமல்ல .இப்பிரச்சனைகள் நீண்டகாலமாக கவனிக்கப்படாமல் உள்ளபிரச்சனையாகும். எனவே எமது அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தக்களையும் சிவில் அமைப்புக்களின் கருத்துக்களையும் பெற்று பாதிக்கப்பட்ட மக்களின் பாதிப்புக்களுக்கு தீர்வுகாண உதவ முனைகின்றது. இதற்கு சிவில் அமைப்பக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.