கிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம். செ.துஜியந்தன்

0
332
இம்முறை கிழக்கில் இருந்து அதிகளவிலான முருக பக்தர்கள் கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினை மேற்கொண்டுவருகின்றனர்.

கதிர்காமம் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் எதிர்வரும் ஜீலை 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதனையிட்டு வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் பாத யாத்திரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தற்போது கிழக்குமாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகியமாவட்டங்களில் இருந்து அதிகமான பக்தர்கள் கதிர்காமத்திற்கான பாதயாத்திரையில் சிறு சிறு குழுக்களாக இணைந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்வாறு செல்லும் அடியவர்களுக்கு இங்குள்ள இந்து ஆலயங்கள், இந்து நிறுவனங்கள், தனவந்தர்கள் ஊடாக அவர்கள் தங்கும் இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டும் வருகின்றது. திருமலை மூதூர் பிரதேசத்தில் இருந்து சின்னச்சாமி தலைமையில் புறப்பட்ட 34 பேர் கொண்ட பாதயாத்திரைக்குழுவினர் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஊடாக பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் பல கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் இணைந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.