பெரியகல்லாற்றில் மலசல கூட குழியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

0
594

மட்டக்களப்பு பெரியகல்லாறு வாசி ஒருவர் புதிதாக புதிதாக கட்டப்பட்ட வீட்டின் மலசல கூட குழியில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 4 பிள்ளைகளின் தந்தை இராசதுரை சுவேந்திரராஜ் வயது 43 (சாரதி) என இனம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி சண்முகநாதன் கணேசதாஸ் சடலத்தை பிரேதபரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லுமாறு  களுவாஞ்சிக்குடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.