பாலர் பாடசாலைகளை அரசு மயப்படுத்தப்பட வேண்டும். இரா.சாணக்கியன்

0
366

அனைத்து பாலர் பாடசாலைகளையும் அரசு மயப்படுத்தப்படல் வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் முனைத்தீவு பாலர் பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாலர் பாடசாலைகள் மீது அரசு அதிக கவனம் செலுத்தி அம்மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆற்றலை வளர்ப்பதனூடாக நாட்டின் நற்பிரஜைகளாக உருவாக்கலாம். ஆனால் பல பில்லியன் கணகிலான நிதி கட்டுமான மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக செலவிடப்படுகின்ற அதேவேளை பாலர் பாடசாலைகளுக்கு அரசினாலோ அல்லது பன்முகப்படுத்தப்பட்ட நிதிகளோ ஒதுக்கப்படுவது அரிது.

பாலர் பாடசாலை மாணவர்கள் மீது அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள் அக்கறை கொண்டு எமது நாட்டின் எதிர்கால தலைவர்களை உருவாக்கவும், இன மத பேதமற்ற எதிர்கால சமூகத்தை உருவாக்கவும் முயற்சி செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் பாலர் பாடசாலைகளை நடாத்தினாலும் அவர்களினதும் முன்பள்ளி ஆசிரியர்களினதும் வாண்மைவிருத்தியினையும் வளர்க்க வேண்டும் என தெரிவித்தார்.