மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் ஆணின் சடலம் மீட்பு.

0
692

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிலுள்ள விடுதிக்கல் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

விடுதிக்கல் கிராமவாசியான குழந்தைவேல் குருசாந்தராசா (வயது – 40) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தனது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை இவரது வீட்டில் யாரும் இல்லாதவாறு அமைதியாக இருந்ததால் அயலவர் இவரது வீட்டை வந்து பார்த்தபோது மேற்படி நபர் சடலமாக காணப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல கொக்கட்டிச்சோலை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், இம் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்