நோயுற்று நடக்க முடியாத நிலையில் காணப்பட்ட மாடுகளை ஏற்றி வந்தவர்கள் கைது.

0
214

மட்டக்களப்பு- சித்தாண்டி – சந்தனமடுஆறு பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சிறிய ரக கெப் வாகனமொன்றில் ஏற்றிவரப்பட்ட மூன்று மாடுகளை நேற்று (27) அதிகாலை ஏறாவூர்ப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த வாகனத்தின் சாரதியும் நடாத்துனரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் – சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதை ஒழிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி எம்பிஜிஜிஎஸ். சத்துரங்க தெரிவித்தார்.

பொலிஸாருக்குக்கிடைத்த இரகசியத்தகவலொன்றையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் மாடுகளுடன் வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

அந்த மாடுகள் நோயுற்று நடக்க முடியாத நிலையில் காணப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள்; மிருகங்களை வதைக்குட்படுத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இம்மாடுகள் இறைச்சிக்காக அறுப்பதற்குக் கொண்டுசெல்லப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.