50 வயதிற்கு மேற்பட்ட அதிபர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.

0
438

50 வயதிற்று மேற்பட்ட அதிபர்களுக்கு அதற்குச் சமமான பயிற்சி நெறியை மாவட்ட மட்டத்தில் நடாத்தி விலக்களிக்க வேண்டும் எனகல்வி அமைச்சரிடம் அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருகோணமலைக்கு விஜயம் செய்த கல்வி அமைச்சரிடம் இக்கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறி தொடர்பாக திருகோணமலை மாவட்ட அதிபர்கள் கையொப்பம் இட்டு இக்கோரிக்கை பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகுறூப் ஊடாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் அவர்களிடம் திருகோணமலையில் வைத்து கையளித்துள்ளனர்.

மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இலங்கை அதிபர் சேவையில் கடமையாற்றும் அனைத்து அதிபர்களும் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடாத்தப்படும் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறியை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும், ”பூர்த்தி செயதால் தான் அதிபர் சேவை தரம் ஐ இற்கு பதவியுயர்வு பெற முடியும்.

ஆனால் வருடாந்தம் 100 பேர் மட்டுமே நுழைவுப் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு தேசிய கல்வி நிறுவகத்தினால் நடைபெறும் கற்கை நெறியைப் பூர்த்தி செய்ய முடியும் இதனால் பெரும்பாளான அதிபர்கள் அதிபர் சேவை தரம் -ஐ இற்கு பதவியுயர்வு பெற முடியாதுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள அதிபர்களில் வருடாந்தம் 100 பேர் மட்டுமே தெரிவு செய்வதனால் 50 வயதிற்கு மேற்பட்ட அதிபர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நுழைவுப் போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவதில் இருந்து 50 வயதிற்கு மேற்பட்ட அதிபர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.

மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறியை நடாத்த வேண்டும். அல்லது 50 வயதிற்று மேற்பட்ட அதிபர்களுக்கு அதற்குச் சமமான பயிற்சி நெறியை மாவட்ட மட்டத்தில் நடாத்தி விலக்களிக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மகஜர் ஒன்றை அதிபர்கள் சார்பில் . வ. சிவானந்தம் , ஏ.ஜே.எம். சாலி ஆகியோர் கையளித்துள்ளனர்