முள்ளிவாவாய்க்கால் படுகொலை தினத்தை காரைதீவில் துக்கதினமாக அனுஷ்டிப்போம்!

0
129
மே18 நிகழ்விற்கு வருமாறு காரைதீவு பிரதேசசபை  தவிசாளர் ஜெயசிறில் அழைப்பு!
காரைதீவு   சகா
 
முள்ளிவாய்க்கால்  படுகொலை தினத்தை காரைதீவில்  துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

 
 
அன்றையதினம் (மே 18 திகதி)காரைதீவில் பாலையடி பிள்ளையார் கோயில் வீதீ (காரைதீவு-08) இல் அமைந்துள்ள பல்தேவைக்கட்டிடத்தில் பிற்பகல்  4 மணியளவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தின நிகழ்வொன்றை நடாத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். 
 
இந்நிகழ்வில் த.தே.கூட்டமைப்பின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
 
 அந்நிகழ்வில் பங்கேற்குமாறு  அனைத்து பொதுஅமைப்புக்களையும்  விளையாட்டுக்கழகங்களையும்  அனைத்து சமயம்சார்ந்த அமைப்புக்களையும்  இளைஞர்கள் யுவதிகள் அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 காரைதீவு பிரதேசசபையின் தவிசாளரும் இ.த.அரசுகட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் 
அதுதொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 
அன்று முள்ளி வாய்க்காலில் எம் உறவுகளை இனச்சுத்திகரிப்பு செய்து இனப்படுகொலையாக அழிக்கப்பட்ட அந்த நாளை தமிழ் உறவுகள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.தமிழரின் துக்கதினமான அந் நாளை இவ் வருடமும் காரைதீவு மட்டுமன்றி கிழக்குமாகாண தமிழ் அனைத்து உறவுகளும் அனுஷ்டிப்போம் என தாழ்வாக வேண்டுகிறேன்.வடக்குமாகாணத்தில் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையான மே18ம் திகதி தமிழின அழிப்பு தினமாகவும் தமிழ்தேசிய துக்கதினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
 
அதேபோன்று  கிழக்கிலுள்ள தமிழ்கிராமங்களிலுள்ள பொதுஅமைப்புக்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்களிடம் சமயம்சார்ந்த அமைப்புக்கள் ஒன்றிணைந்தால்  மே 18ம் தினமன்று தமிழரின் துக்க தினமாக அனுஷ்டித்து தமிழரின் இனப்படுகொலையை நினைவு கூரலாம்.வாகரையில் நினைதூபியிலும் அனுஷ்டிக்கவுள்ளனர்.
 
 அதே போன்று அனைத்து தமிழ்பிரதேசங்களிலும் தமிழனின் இனப்படுகொலையை துக்கதினமாக அனுஷ்டிக்க வேண்டுமென்பது எனது அவா.முடிந்தவரை செயற்படுத்துங்கள்