மட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வு மடக்கிப்பிடித்த பொலிஸார்.

0
272

மட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களை இன்று புதன்கிழமை (16) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த உழவு இயந்திரங்களின் சாரதிக்ள ஆறு பேரும் கைது செய்யப்பட்டு கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கித்துள் ஆற்றுப் பகுதியில் உழவு இயங்திரங்களை ஆற்றுக்குள் இறக்கி மணல் அகழப்படுவதாக கிடைத்த இரகசியத்தகவலொன்றையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினரால் மணல் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

உழவு இயந்திரங்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.