வாழைச்சேனை கிண்ணையடியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்.

0
106

கோறளைப்பற்று வாழ் பொதுமக்களின் ஏற்பாட்டில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தின அனுஷ்டிப்பு வாழைச்சேனை கிண்ணையடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் காலை 9 மணிக்கு மணிக்கு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி விஷேட பூஜை என்பன கிண்ணையடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலை 9 மணிக்கு மணிக்கு கிண்ணையடி ஆற்றங்கரை முற்றத்தில் உணர்வுபூர்வமாக சுடர்கள் ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பின்னர் ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்று, இரண்டாயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

முள்ளிவாய்காலில் உயிர் நீத்த எமது உறவுகளின் ஆத்மா சாந்திவேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட உணர்வு பூர்வமான நினைவேந்தலில் கட்சி இன, மத வேறுபாடுகளின்றி அனைவரும் கலந்து கொள்ளுமாறு கோறளைப்பற்று வாழ் பொதுமக்கள் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.