இலங்கைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமைசேர்த்த உதயராணி

0
698

பொன்சற்சிவானந்தம்;

நடந்துமுடிந்த தெற்காசிய கனிஸ்ர விளையாட்டுப்போட்டியில் ஈட்டிஎறிதலில் 3வது இடத்தைபெற்று வெண்கலப்பதக்கம் வென்ற நாகேந்திரம் உதயராணிக்கு திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் வரவேற்பு நிகழ்வு பிற்பகல் 3.00மணியளவில் இடம்பெற்றன.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜனாரத்தனன் தலமையில் நடந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேசசபையின் தவிசாளர் டாக்கடர் ஜி.ஞானகுணாளன் உள்ளிட்ட பலரும் பல விளையாட்டுத்துறை சார்ந்தவர்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்டு வரவேற்று கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் இவரைபயிற்றுவித்த ச.விஜயநீதன், ஆசிரியர், தங்கநகர் ஆரம்ப பாடசாலை பயிற்றுவிப்பாளராக தினேஸ்குமார் ஆசிரியர் அப்பாடசாலையின் அதிபர் பா.கோணெஸ்வரராஜா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது அசிகளை வழங்கினர்.

இங்கு உரையாற்றிய முன்னாள் கல்வி அமைச்சர். சாதனைபடைத்தவர்கள் எல்லாம் சகல வளங்களையும் வைத்துக்கொண்டு சாதனைகளைச்செய்வதில்லை. அந்த வகையில் உதயராணியும் மிகவும் வறிய பின்தங்கிய பகுதியில் பிறந்து இன்று பல சிரமங்களுக்கு மத்தியில் எமது நாட்டிற்கும் எமது கிழக்கு மாகாணத்திற்கும் பெருமைசேர்த்துள்ளார். இவரது எதிர்கால வளர்சிக்கு மேலம் பலரும் உதவுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு எனவும் குறிப்பிட்டார்.

இங்கு பேசிய உதயராணி குறிப்பிடுகையில் நான் இங்கு பயிற்சிக்கு வருகின்றபோதெல்லாம் எனக்கான போக்குவரத்து பஸ்காசைக்கூட விஜநீதன் ஆசிரியர் அவர்கள் தான் தந்து ஊக்கப்படுத்தி பயிற்றுவித்தார். அவ்வாறே என்னi பாடசாலை மட்டத்தில் பயிற்றுவித்த தினேஸ்குமார் ஆசிரியர் உள்ளிட்ட பலருக்கும் எனது நன்றியைதெரிவித்துக்கொள்கின்றேன். எனவும் குறிப்பிட்டார். இவருக்கு இதன்போது புனித ஜோசப்கல்லூரி அதிபர் மற்றும் பலரும் பல அன்பளிப்புக்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

இவர் திருகோணமலை மாவட்டத்தின் தென்பகுதியான கிளிவெட்டிக்கு அடுத்தால்போல் அமைந்துள்ள தங்க நகர் கிராமத்தைச்சார்ந்தவராவார். இவரது தந்தையார் நாகேந்திரம் அவர்கள் ஒரு விவசாயி என்பதுடன் மிகவும் வறிய குடும்பத்தைச்சார்ந்தவர்கள் ஆகும் தயார் நாகேந்திரம் ஞானமணியாகும் தற்சமயம் இவர் பட்டித்திடல் வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.