ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எதிர் சிவானந்தா வித்தியாலயம் Battle of the Golds”

0
447

(பொன்ஆனந்தம்)

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எதிர் சிவானந்தா வித்தியாலயம்

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மட்டக்கள் சிவானந்தா வித்தியாலயம் என்பவனற்றுக்கு இடையே நடத்தப்படும் 25வது தங்கத்திற்கான சமர்  “Battle of the Golds”இம்முறை திருகோணமலையில் நடைபெறுகிறது.

இராம கிருஸ்ண சங்க மரபில் உள்ள இவ்விரு பாடசாலைகளும் தமக்கிடையே சகோதரத்துவத்தையும் பரஸ்ரத்தையும் ஏற்படுத்தும் முகமாக 1993ம் வருடம் இப்போட்டி முதன்முறையாக திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்டது.

சணச வங்கியும், துர்க்கா தொலைத் தொடர்பு நிறுவனமும் இணைந்து இதற்கான அனுசரணையை வழங்கி இருந்தது. 15.09.1993ம் வருடம் 20 பந்து பரிமாற்றங்கள் கொண்டதாக மென்பந்தில் ((Softball) ,) இப்போட்டி நடத்தப்பட்டது. அடுத்த வருடம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இது கடினபந்து (ர்யசனடியடட) போட்டியாக மாற்றம் பெற்று தொடர்ந்து கடின பந்தில் விளையாடப்பட்டு வருகிறது.

சணச வங்கியில் தொழிலாற்றியவரும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவமான விவேகாந்தன் நரேந்திரா என்பவரின் சிந்தனையே இப்போட்டி தோற்றம் பெறுவதற்கு காரணமாக அமைந்தது. இவர் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபராக இருந்த .சி.தண்டாயுதாணி அவர்களோடு தொடர்பு கொண்டு தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் சிவானந்தா வித்தியாயலயத்தின்; அதிபராக இருந்த .என்.விஜயரெட்ணம் அவர்களோடு தொடர் கொண்டு அவரின் சம்மதத்தினை பெற்றுக் கொண்டனர்.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் .சி.தண்டாயுதாணி, விளையாட்டு துறை பொறுப்பாசிரியர்களான பசீர் அமீர். சி.சசிகுமார், சிவானந்தா வித்தியாலய அதிபர் என்.விஜயரெட்ணம், போட்டியின் காரணகர்த்தா வி.நரேந்திரா, முந்நாள் வடக்கு கிழக்கு மாகாண விளையாட்டு உதவி பணிப்பாளர் மாமனிதர் ஏ.எஸ்.குணரெட்ணம் ஆகியோர் பங்கு கொண்ட சந்திப்பில் இப்போட்டி பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

இப்போட்டி ““Battle of the Golds”” எனவும் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினது கொடியில் உள்ள பச்சை மஞ்சல் நிறமும், சிவானந்தா வித்தியாலயத்தின் கொடியில் உள்ள நீலம் மஞ்சல் நிறத்தில் இருந்து மஞ்சல் வர்ணத்தை பொதுவாக கொண்டு இப்போட்டிக்கான நிறமாக மஞ்சல் தெரிவு செய்யப்ட்டது. முதல் போட்டியினை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினர் நடத்துவது.

ஓற்றை வருட போட்டிகள் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்திலும் இரட்டை வருட போட்டிகள் சிவானந்தா வித்தியாலய மைதானத்திலும் அந்தந்த பாடசாலைகளால் நடத்தப்பட்டு வருகின்றது.

1993, 1995, 1997. 1999,ம் வருடங்களில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 1994, 1996, 1998ம் வருடங்களில் சிவானந்தா வித்தியாலய அணியினரும் அந்தந்த மாவட்டங்களில் மண்ணின் மைந்தர்களாக வெற்றி பெற்றிருந்தனர்.

இதனை 2000ம் வருடம் சிவாந்தா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற எட்டாவது போட்டியில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணியினர் வெற்றி பெற்று மண்ணின் மைந்தர்கள் அந்நிய மண்ணிலும் வெற்றியாளராகலாம் என்ற நிலையை தோற்றுவித்தனர். 2010ம் வருடம் பதினேழாவது போட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட்ட போது சிவானந்தா வித்தியாலய அணியினர் வெற்றி பெற்று முதல் தடiவாக அந்நிய மண்ணில் தங்களது முதலாவது தடத்தினை பதித்து கொண்டனர்.

இதன் பின்னர் 2011ம் வருடம் தொடக்கம் சிவானந்தா வித்தியாலய மைதாத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணயினரும், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சிவானந்தா வித்தியாலய அணியினரும் வெற்றிகளை பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையும் 2015ம் வருடம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2015ம் வருடம் 22வது போட்டியில் சிவானந்தா மைதானத்தில் சிவானந்தா அணியிரும், 2016ம் வருடம் 23வது போட்டியில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 2017ம் வருடம் 24வது போட்டியில் சிவானந்தா மைதானத்தில் சிவானந்தா அணியினரும் வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.

இது வரை நடைபெற்ற 24 போட்டிகளில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 13 தடவைகளும் சிவானந்தா வித்தியாலய அணியினர் 11 தடவைகளும் வெற்றிகளை பெற்றுள்ளனர். இவ்வருடம் இப்போட்டி திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினரால் இம்மாதம் 13ம் திகதி (2018.05.13) ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் 25வது போட்டியாக நடத்தப்பட உள்ளது.

இப்போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு வேண்டிய பிரதான அனுசரணையினை 2001ம் வருடம் உயர்தரம் கற்ற ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழையமாணவர்கள் வழங்குகின்றனர். இவர்களுடன் நாடுபூராவும் மாபெரும் போட்டிகளுக்கு அசரணை வழங்கும் டயலொக் தொலை தொடர் நிறுவனமும், வீரர்களுக்கான கோல உடைக்கான அனுசரணையை இலங்கையின் தேசிய வங்கியான இலங்கை வங்கியும், இலத்திரனியல் ஊடக அனுசரணையை கெப்பிட்டல் எப். எம் வானொலியும் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.

2018.05.13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ள 25வது மாபெரும் போட்டியின் போது திருகோணமலை நகர முதல்வர் நாகராஜா ராஜநாயகம் பிரதம விருந்தினராகவும், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் க.பாஸ்கரன், இலங்கை hடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளர் டயிள்யூ டில்சான் பெர்ணாண்டோ ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும், விசேட விருந்தினர்களாக பற்றல் ஒவ் தி கோல்ட்ஸ் ““Battle of the Golds” காரணகர்த்தாவும் தற்போது கனடாவில் வசிக்கும் வி.நரேந்திரா, டயலொக் நிறுவத்தின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் வசந்த குணரெட்ண, திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் நடத்தப்படும் இ;போட்டியினை விளையாட்டு பொறுப்பாசிரியர் சி.சசிகுமார் கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம், கல்லூரி ஆசிரியர்களோடு இணைந்து ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றார்.

இம்முறை இப்போட்டிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாக ஏலவே 24 போட்டிகளில் பங்கு கொண்டிருந்த சமராடிகள் மத்தியில் 30 வயதுக்கு உட்பட்ட அணியினர், 30 வயதுக்கு மேற்பட்ட அணியினர் என்போருக்கு இடையே 2 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது போட்டிக்கு முதல் நாள் 2018.05.12 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இதனை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சமராடிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அடுத்த வரும் இப்போட்டியினை நடத்தும் பொறுப்பு சிவானந்தா வித்தியாலய சமராடிகளைச் சார்ந்தது. வருடாவரும் இப்போட்டியும் தொடர்ந்து நடத்துவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளது.