நாங்கள் முஸ்லீம்மக்களை வேறு படுத்திப்பார்க்க வில்லை.க.துரைரெட்ணசிங்கம் பா.உ

0
591

பொன் சற்சிவானந்தம்

“தந்தை செல்வா தமிழரசுக்கட்சியை ஆரம்பித்த பொழுது தமிழ்பேசும் மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதற்கான கட்சியாகவே இதனை ஆரம்பித்தார்.இன்றும் எமது கட்சி அந்தப்பாதையிலேயே பயணித்து வருகின்றது. இக்கூட்டத்தில் எமது முஸ்லீம்சகோதரர்களும் கலந்து கொண்டிருப்பது அதனை நிரூபிக்கின்றது” என பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடந்த தமிழ்தேசியக்கூட்டமைப்பின் மேதினக்கூட்டத்தின் இறுதியில் பேசுகின்றபோதே அவர் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

அவர்மேலும் குறிப்பிடுகையில்,நாங்கள் முஸ்லீம்மக்களை வேறு படுத்திப்பார்க்க வில்லை.சிலவேளைகளில் அரசியல் சுயலாபத்திற்காக சிலர் வேடிக்கைகளைப்பார்க்கிறார்கள். தனிப்பட்ட பிரச்சனைகளை கிளப்பி விட்டு இரண்டு சமூகத்தையும் பிரிப்பதற்கு பல சதித்திட்டங்கள் திரைமறைவில் நடந்த வண்ணமுள்ளன.

அவ்வாறான விடயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருகோணமலையில் கூட ஒரு பாடசாலையில் ஏற்பட்ட பிரச்சனையை இன்று பூதாகரமாக கொண்டு வரப்படுகின்றன. எமது சிறுபான்மை மக்களின் அரசியல் பயணத்தின் தூர நோகத்தைச்சிந்தித்து செயற்பட வேண்டிய கால கட்டத்திலே நாங்கள் அனைவரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

இந்தக்கூட்டத்திலே பல தொழிற்சங்ககங்களின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அவர்களது பிரச்சனைகளை வெளிப்படுத்தினார்கள். அவற்றை நாம் அறிவோம். மீனவர்களின் பிரச்சனைகள் பற்றியெல்லாம் இங்கு முன்வைக்கப்பட்டன. இவற்றையெல்லாம் தீர்க்க நாம் கடந்த காலங்களில் பல முயற்சிகளை நாம் எடுத்தோம். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்க கடிதங்களை நாம் எழுதினோம். ஆனால் எதுவும் நடக்க வில்லை. இதற்கு காரணம் எமக்கு அதிகாரம் இல்லை. அந்த அதிகாரத்தை வழங்கு மாறு கோரியே நாம் எமது நீண்டகால போராட்டத்தை நடாத்தி வருகின்றோம்.

அதற்கான அதிகாரம் இருந்திருந்தால் எமது தலைவர் அதற்கான உத்தரவவை வழங்கக்கூடிய சாத்தியம் இருந்திருக்கும்.

இந்த அதிகாரத்தை நாம் பெற்றுக்கொள்ள கடந்த பல தசாப்தங்களாக நாம் போரடி வருகின்றோம். அந்தப்போராட்டங்கள் எமது இலக்கை அடையாமல் இருப்பதற்கான காரணங்களை நாம் சிந்திக்க வேண்டும் பல காட்டிக்கொடுப்புகளும், குறிப்பாக எம்மத்தியில் ஏற்பட்ட சில ஒற்றுமையினங்களும் அதற்கு காரணமாக அமைந்திருந்துள்ளன. ஆகவே இந்தக்கால கட்டத்தில் நாம் மிகவும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது கட்டாய கடமையாக விருக்கின்றது.

கடந்தகாலத்திலே எமது தொழிற்சங்கங்களின்போராட்டத்திலும அரசியல் போராட்டத்திலும்,; ஆயுதப்போராட்டத்திலும், பின்னடைவைக்கண்டிருக்கின்றன. இவைகளெல்லாம் மாறு பட்டுச்செல்வதற்கு ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாக இருந்தமையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் தலமைகளைப்பொறுத்தவரையில், எமது தமிழ்தலைமைகள் எப்போதும் உரிமைக்காக குரல்கொடுத்து வந்துள்ளன.இது எங்களுடைய சாதனையாகவுள்ளன.

அதனுடைய பலாபலன்தான் இன்றும் நாம் அரசியல் களத்திலே நின்று போராடிக்கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் எமது தலமைகளெல்லாம் ஒருமித்து ஒன்றாக நின்றிருந்தால் எமக்கான உரிமைகளை என்றோ நாம் பெற்றிருக்க முடியும், அதன்மூலம் நாங்களும் எங்களது சந்ததியும் அந்த உரிமைகளை அனுபவித்திருக்கலாம்.

ஏங்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வு இன்று நாளையும் தீரும் என்று சொல்ல முடியாது. நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் எற்பட்டிருக்கிறது. அதன்மூலம் எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் இருந்தது. அந்த நம்பிக்கையும் இன்று படிப்படியாக குறைவடைந்து வருகின்றதை நாம் உணர்கின்றோம்.

ஏனெனில் வருகின்ற எட்டாம் திகதி தேசிய அரசாங்கத்திற்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எங்களுக்கு இருக்கின்றது. ஒரு பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியிலே இந்த நல்லாட்சி நிலப்பாடும்சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறான தொரு சூழலில் ஒரு பாரிய சிக்கலுக்கு மத்தியில் எமது அரசியல் தலமைகள் அரசியல் செயற்பட வேண்டிய பொறுப்பில், கட்டாயத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.

அகவே எங்களுடைய தொழிற்சங்க நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி எங்களுடைய அரசியல் நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி எங்களிடம் ஒற்றுமை மிகவும் முக்கியமானதாக வுள்ளது. அதனை நாம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம்.

முரண்பாடுகள் எல்லா இடத்திலும் இருக்கும் எங்கு தான் இல்லை முரண்பாடுகள்? அது சாதாரணமாக நடக்கும் விடயம் அந்த முரண்பாடுகளை நாம் வெற்றிகொண்டே யாகவேண்டும். நாம் ஏன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதனை நாம் ஆழமாக ஆராய வேண்டும். நாம் இதன்மூலம் கடந்தகாலத்தில் சாதித்தவற்றையும் சாதிக்கத்தவறியவற்றையும் பற்றி சிந்தித்து உணர்ந்துகொண்டு செயற்பட வேண்டும்.

அதற்கான பொருத்தமான காலகட்டமாக இது இருக்கின்றது.எங்களது போராட்ட வரலாற்றில் அந்தப்போராட்டத்திற்காக செயற்பட்ட இளைஞர்களை நாங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் செய்த தியாகங்களை நாங்கள் எண்ணிப்பாரக்க வேண்டும்

எங்களுடைய புனிதமான அந்த போராட்டப்பாதையை தனிப்பட்ட சிலரின் விருப்பங்களுக்காக சுயலாபங்களுக்காக நாம் சிதறடிக்க விட முடியாது. யாரும் தப்புவிடலாம் அதற்காக அவர்கள் தண்;டிக்க கூடியவர்களல்ல. அவர்களை திருத்த வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கிருக்கின்றது. சமூகம்தான் ஒருவரை திருத்தமுடியும். ஒரு அரசியல் கட்சியை விட ஒரு சமூகத்திற்குத்தான் ஒவுரின் தவறுகளைத்திருத்தக்கூடிய சந்தர்பம் உள்ளது.

எனவே அரசியல் சயநலங்களை மறந்து, தனிப்பட்டவர்களின்நலனை மறந்து, தற்காலத்தில் எமது நிலமைகளை உணர்ந்து எமது நீண்ட கால போராட்டத்தின் இலக்கைப்புரிந்து எமது விடுதலைய எட்டும்வகையில் நாம் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும் எனவும் வலியுறுத்தினார்.