ஆரையம்பதி இளம்தென்றல் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

0
371

ஆரையம்பதி வடக்கு இளம்தென்றல் விளையாட்டுக்கழகம், காந்தி இளைஞர் கழகம் மற்றும் பாரதி சனசமூக நிலையம் ஆகிய இணைந்து “உதிரம் பகிர்ந்து, உயிர் காப்போம்!” எனும் தொணிப்பொருளில் ஆரையம்பதி ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய முன்றலில் நேற்றையதினம்         29.04.2018) மாபெரும் இரத்ததான நிகழ்வினை சிறப்பான முறையில்  நடாத்தியிருந்தனர்

இவ் இரத்ததான நிகழ்வானது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்  இரத்தவங்கி பொறுப்பதிகாரி Dr. விவேகானந்தநாதன், பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. இவ் நிகழ்வில் கழகங்களின் அங்கத்தவர்கள், அதிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் இரத்ததானம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வினை கௌரவப்படுத்தும் விதமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. சதாசிவம் வியாழேந்திரன் அவர்களும், மாவட்ட வைத்திய அதிகாரி Dr. S. F. அம்மேடா அவர்களும், காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி Mr. N. P. Kasthuri Arachchi அவர்களும், காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ்பொறுப்பதிகாரி Mr. Thushara அவர்களும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய சங்கத்தலைவர் திரு. பூ புஸ்பராஜா அவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

“உயிர்களைக் காத்திட பணி செய்வீர்! உம் உதிரம் பகிந்து!”