ஓட்டமாவடியில் போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கைது

0
657

போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

பொலநறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்த 18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்ட நான்கு பேரே ஐயாயிரம் ரூபாய் போலியான பதினொரு நாயணத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டர் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பி விட்டு நாணயத்தாளை வழங்கும் போது ஊழியர் இது போலி நாணயத்தாள் என அறிந்து பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது குறித்த சந்தேக நபர்கள் ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை வாயில் போட்டு மென்ற போது பொலிஸாரால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.