பரீட்சை திணைக்களத்தின் பெறுபேறுகளை ஒன்லைன் மூலம் உறுதி செய்தல்

0
131

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் பெறுபேறுகளை ஒன்லைன் முறையில் உறுதி செய்ய முடியும்.

இதன் முதற்கட்ட நடவடிக்கை நேற்று ஆரம்பமானது. 6 லட்சத்திற்கு மேற்பட்ட சான்றிதழ்களின் பெறுபேறுகளை உறுதி செய்வதற்காக பரீட்சை திணைக்களத்திற்கு கிடைக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை நாட்டிலுள்ள வலய அலுவல்களிலிருந்து கிடைக்கப் பெறும் கோரிக்கையாகும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை சான்றிதழை உறுதி செய்யும் நடவடிக்கையை பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழ் கிளை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

உறுதி செய்வதற்கான கோரிக்கையை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் போது இடம் பெறும் முறைகேடுகள் கால தாமதம் ஆகியவற்றை தடுப்பதே இதன் நோக்கமாகும்.

இதற்காகவே இந்த ஒன்லைன் முறை கணனியுடன் நேரடி தொடர்பை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனூடாக வலய அலுவலகங்களுக்கு பெறுபேறுகளை உறுதி செய்யும் அதிகாரம் பரவலாக்கபபட்டுள்ளது.

அனைத்து பணிகளும் பரீட்சை திணைக்களத்தின் முழுமையான கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் பரீட்சை திணைக்களத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.எஸ். இராதாகிருஷ்ணன், பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.