திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துமகளீர்கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம்

0
330

பொன்ஆனந்தம் –

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துமகளீர்கல்லூரியின் முன்பாக இன்று காலை 7.00மணியளவில்பெற்றார் நலன்விரும்பிகள் திரண்டு ஆர்பாட்டமொன்றை நடாத்தினர்.

பாடசாலை நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத ஓரு சில ஆசிரியர்களின் நடத்தையைக்கண்டித்தும் அவர்களால் பாடசாலை மத்தியில் ஏற்பட்ட குளப்பகரமான சூழலைக்கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்களை உடன்வெளியேற்றக்கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பினர். சிதைக்காதே சிதைக்காத கலாசாரத்தை சிதைக்காதே,பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்காதே,தூண்டாதே தூண்டாதே மதவாதத்தை தூண்டாதே, பாடசாலைகெதிரான ஆசிரியரை வெளியேற்று பொன்ற பல கோசங்களை ஆர்பாட்டக்காரர் எழுப்பினர். இந்நிலையில் சுமார் 8.45 மணியளவில் பாடசாலைக்கு வருகைதந்த வலயக்கல்வி ப்பணிப்பாளர் தலமையிலான குளுவினர் பாடசாலை நிருவாகத்தினருடன் கலந்துரையாடினர். இதன்பின்னர் பாடசாலை அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வர்கள் மத்தியில் குறிப்பிடுகையில், குறித்த விடயம் தொடர்பாக எமது பாடசாலை பெற்றார் ஆசிரியர்சங்கம் நேற்றுமலை கலந்துரையாடியதற்கிணங்க கல்வி நிர்வாகத்துடன் இதுதொடர்பாக பேசி தீர்வுகாண முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. எனவே பொராட்டைத்தை கைவிடுமாறு கோரினார். ஆயினும் திடமான முடிவு வரும் வரை தமது பொராட்டம் தொடரும் எனவும் இதுசம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர்களின்கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர். நிலமையைக்கட்டுப்படுத்த பொலிசாரும் அதிகாரிகளும் பேச்சுவாரத்தைகளை மேற்கொண்டனர். இப்போராட்டம் காரணமாக பாடசாலை வீதியில் நெரிசல் ஏற்பட்டதுடன்.போக்குவரத்தும் பலமணிநேரம் தடைபட்டன.