8 ஆம் திகதி எதிர்க்கட்சியில் அமர்வது உறுதி.

0
239

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16பேரும் எதிர்வரும் 8 ஆம் திகதி எதிர்க் கட்சியில் அமர்வதாக உறுதியான தீர்மானம் எடுத்துள்ளதாகவும் மஹிந்த அணியுடன் சேர்வது தொடர்பில் இதுவரையில் எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லையெனவும் முன்னாள் அமைச்சர் டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

நேற்று இரவு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய 16 பேரும் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் வெளியேறும் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

தமது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் செனவிரத்ன எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.