மத்திய விளையாட்டுக்கழக உறுப்பினர் அமரர் சரவணமுத்து துவாரகன் ஞாபகார்த்தக் கிண்ணப் போட்டி

0
467
(க.விஜயரெத்தினம்)
மத்திய விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர் அமரர் சரவணமுத்து துவாரகன் அவர்களது மூன்றம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மத்தியவிளையாட்டுக்கழகத்தின்  ஏற்பாட்டில் மாபெரும் கிறிக்கட் மென்பந்துச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி  ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எஸ்.அரங்கநாதன் தலைமையில் துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டாரில் விபத்துக்குள்ளான மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து  அவர்களின் புதல்வாரன துவாரகன் அவர்களின் ஞாபகார்த்தக் கிண்ணப் போட்டி கடந்த ஒரு மாதகாலமாக  நடைபெற்றுவந்தது இதில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த 32 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தது.
 இதில் இறுதிப்போட்டிக்கு சம்மாந்துறை யுனிற்றி விளையாட்டுக்கழகமும் மகிழூர் பையனியர் விளையாட்டுக்கழகமும் தெரிவாகி இறுதிப்போட்டியில் மகிழூர் பையனியர் விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவானது
இந்நிகழ்வில் அதிதிகளஅஅஅhக துவாரகனது தந்தை பிரதேசசபை உறுப்பினர் க.சரவணமுத்து ஓய்வுபெற்ற மட்டக்களப்பு கல்வி வலயத்தின் விஞ்ஞானவள நிலையப் பொறுப்பாளரும் மத்தியவிளையாட்டுக்கழக ஆலோசகருமான ந.புள்ளநாயகம் ஊடகவியலாளரும் ஆசிரியருமான சா.நடனசபேசன் துறைநீலாவணை இளைஞர் அமைப்பின் தலைவரும் வங்கி முகாமையாளருமான அ.வேளராசு சிறுவார் பாதுகாப்பு உத்தியோகத்தர் தி.தயாளன் மற்றும் மத்தியவிளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.