மட்டக்களப்பு மாநகரசபையின் நிலையியற் குழுக்களின் சுகாதாரப் பிரிவிற்கு மாநகரசபையின் சிவம் பாக்கியநாதன்

0
503
மட்டக்களப்பு மாநகரசபையின் நிலையியற் குழுக்களின் சுகாதாரப் பிரிவிற்கு மாநகரசபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தெரிவு செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் மாநகர சபையின் செயலாளர் எம்.ஆர். சியாஹுல் ஹக் முன்னிலையில் முதல்வரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றபோது 6 பேர் கொண்ட குறித்த குழுவிற்கு தலைவராகத் தெரிவானார்.
மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு, கோட்டைமுனை. வெட்டுக்காடு, இருதயபுரம், மாமாங்கம், வலையிறவு, திருப்பெருந்துறை, கல்லடி, நாவற்குடா மற்றும் கொக்குவில் ஆகிய 10 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.