சுவிசில் சண் தவராஜாவின் நூல் வெளியீடு

0
551
ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய ‘தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு’ என்ற நூலின் வெளியீட்டு விழா நாளை (ஏப்ரல் 22) பிற்பகல் சுவிஸ் – பேர்ண் நகரில் இடம்பெறும். எழுத்தாளர் கல்லாறு சதீஸ் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, கவிஞர் தா. பாலகணேசன், எழுத்தாளர் மதுபாரதி (திருமதி பா.இளங்கோ) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வர்.
சிறப்பு நிகழ்வாக ஊடகவியலாளர் மகாமுனி சுப்பிரமணியம் அவர்களின் ‘வலி சுமந்த ஒளிப்படங்கள்’ என்ற தலைப்பிலான ஒளிப்படக் கண்காட்சியும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.