வாழைச்சேனையில் 68 டெங்கு நோயாளர்கள்

0
219

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி மாதம் 01ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 20ம் திகதி வரை அறுபத்தி எட்டு பேர் டெங்கு நோயாளர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.பாமினி அச்சுதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து டெங்கு நுளம்பு பெருக்கத்தைத் தடுக்கும் நோக்கில் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள அரச திணைக்களங்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று அப்பகுதியின் சுற்றுச் சூழல் சுத்தம் தொடர்பாக அவதானிப்பதுடன், டெங்கு தாக்கத்தினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் பொது மக்களை விழிப்படை செய்யும் நடவடிக்கையினை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், டெங்கு இணங்காணப்பட்ட பிரதேசங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் புகை விசுரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.பாமினி அச்சுதன் மேலும் தெரிவித்தார்.