கல்முனையில் ஒலித்த மனித உரிமைக்கான குரல்கள்

0
422

இலங்கையில் உயிர்வாழும் உரிமை அரசியலமைப்பில்; இல்லை :
இறுதிக்கட்டயுத்தத்தில் யுத்தநீதி மீறப்பட்டுள்ளது! இன்னும்நீதி?
மனிதஉரிமை ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன்!
(காரைதீவு நிருபர் சகா)

மனிதனுக்கான முக்கிய உரிமைகளில் ஒன்றான உயிர்வாழும் உரிமை இலங்கை அரசியல்யாப்பில் இல்லை. உத்தேச புதிய அரசியல்யாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன்லத்தீப் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய பணிமனையும் அகம் நிறுனமும் இணைந்து ஏற்பாட்டைச்செய்த இனநல்லுறவை ஏற்படுத்தும் மனிதஉரிமையும் நல்லிணக்கமும் என்ற தலைப்பில் சர்வமத கலந்துரையாடல் ஒன்று கல்முனை அம்மன்கோயில்வீதி டிலானி மண்டபத்தில் நேற்று(19)நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அகம் நிறுவன திட்ட அமைப்பாளர் கே.லதன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
இறுதிக்கட்டத் யுத்தத்தில் யுத்தநீதி மீறப்பட்டுள்ளது என ஜ.நாவின் மனிதஉரிமை செயலகம் கூறியுள்ளது. மனிதஉரிமைமீறலுக்கு பெயர்போனது இலங்கை என்ற பிரதிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இறுதிகட்டயுத்தத்தில் நிராயுதபாணியாகவிருந்த பெண்கள் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். இது அப்பட்டமாக சர்வதேச யுத்தச்சட்டத்தை மீறியுள்ளது.
ஆனால் இதற்கான நீதி இன்னும் பெறப்படவில்லை.

300வருடங்களுக்கு முன்னரே இராமாயணம் கூறியதென்ன?
1948இல் வெளியிடப்பட்ட ஜ.நா.வின் மனிதஉரிமைசட்டகத்தில் குறிப்பிடப்பட்ட பலஅ ம்சங்கள் 3000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் இராமாயணம் எனும் இதிகாச நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நிராயுதபாணியான எவரையும் கொல்லக்கூடாது என்ற யுத்த தர்மம் அன்று புராண இதிகாசங்களில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
இராவணனுடனான போரில் இராமன் நடந்துகொண்ட விதம் அன்று யுத்தநீதியை பறைசாற்றியிருந்தது. அதாவது ஒருதடவை இராவணன் யுதத்தின்போது நிராயுதபாணியானான். அந்தக்கட்டத்தில் இராமன் அவனைக்கொல்லவில்லை; மாறாக ‘இன்றுபோய் நாளை வா!’ என்றுகூறினார். அதுதான் யுத்தநீதி. பாருங்கள் 3000வருடங்களுக்கு முன் அழகாக இராமாயணம் யுத்தநீதி பற்றிக்கூறியுள்ளது.
சகல சமயங்களும் அன்றே சகல மனிதஉரிமைகளையும் யுத்தநீதியையும் கூறியிருக்கின்றன.
ஆனால் நாம் 3000வருடங்கள் கழிந்தும் இன்றும் அதனைச்செய்யத்தலை;பட்டுள்ளோம். இது சர்வதேச ரீதியில் இலங்கையின் கீர்த்திக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.இன்னும் அதற்கான நீதி வழங்கப்படவில்லை.
பெண்ணுரிமை கூறுவதென்ன?
இந்து சமயத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு பெண்தெய்வங்களை நியமித்தார்கள்.
நிதித்துறைக்கு லக்ஸ்மிதேவி கல்வித்துறைக்கு சரஸ்வதிதேவி பாதுகாப்புவீரத்துறைக்கு துர்க்காதேவி ஆகிய பெண்தெய்வங்களுக்கு வழங்கியுள்ளனர். பாருங்கள் அன்றே பெண்ணுக்கான உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
ஒருதடவை கெட்ட நடத்தையுள்ள பெண்ணுக்கு கல்லெறிய முற்பட்டவர்களிடம் உங்களில் யார் தூய்மையானவரோ அவர் எறியலாம் என்று யேசுநாதர் கூறியதும் யாருமே எறியவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர் யார்?
இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமலபோனவர்கள் தொகை அதிகம். கணவனை இழந்து பெண்தலைமைதாங்கும் குடும்பங்கள் அதிகம். அவர்கள் இன்றும் தத்தம் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நீதி இன்னும் பெறப்படவில்லை.
காணாமல்ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு விமோசனம் கிடைக்குமா?
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆனந்தசுதாகரன் விவகாரத்தை அறிந்திருப்பீர்கள். இன்னும் கையெழுத்துவேட்டை தொடர்கிறதே தவிர விடுதலைக்கான சமிக்ஞையைக்காணவில்லை. அந்தப்பிள்ளைகளின் நிலைமையை உணர்வுகளை சற்றுச்சிந்தித்துப்பாருங்கள்.
அம்பாறை திகன சம்பவம் கூறுவதென்ன?
30வருடப்போரில் நாம் கற்ற பாடங்கள் மறந்துவிடவில்லை. நல்லாட்சி வந்து 3வருடங்களாகின்றன. நல்லசூழலில் இருக்கும்போது திட்டமிட்டு அம்பாறையிலும் திகனயிலும் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் வெட்கித்தலைகுனியவைக்கின்றன.
இந்த நாட்டில் சிறுபான்மைமக்கள் தொடர்ந்து அடிபட்டுவந்துள்ளனர். ஆனால் இன்னும் அது தொடர்வது கவலைக்குரியது. வெட்கப்படவேண்டியுள்ளது.
எனவேடி தமிழ்பேசும் சமுகங்கள் ஒன்றாக ஒற்றுமையாக இல்லாதவரையில் பெரும்பான்மை இப்படியான துர்ச்சம்பவங்களை தொடர்ந்துகொண்டேயிருக்கும். முதலில் எம்மிடையேயுள்ள பிரச்சினைகளை பேசித்தீர்க்கவேண்டும். பின்னர் வெளிச்சக்திகளிடமிருந்து வரும் சவால்களை முகங்கொள்ளலாம். என்றார்.