சம்பந்தன் ஜயாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை கருத்துரைத்தார் அரியம்

0
492

நம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல் தீர்வில் இல்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றச்சாட்டு.

(டினேஸ்)

இலங்கை அரசியல் வரலாற்றில் எந்தக்கட்சி ஆட்சியமைத்தாலும் தமிழர்கள் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான  அக்கறை எவருக்குமே இல்லை தற்போதய நல்லாட்சி என்ற முலாம் பூசப்பட்ட இந்த அரசிலும் பிரதமர் எதிர்கட்சி தலைவர் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு காட்டும் அக்கறை ஒற்றுமை இனப்பிரச்சினை தீர்வுக்கு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கைதமிழரசுகட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

கொக்கட்டிச்சோலை கெவிளியாமடு மக்கள் சந்திப்பின்போது இன்று 20/04/2018 கருத்துக்கூறிய அவர் 2015,ல் புதிய அரசு பதவி ஏற்று நல்லாட்சி அரசு என்ற பெயருடன் தற்போது மூன்றுவருடத்தை எட்டும் இவ்வேளையில் பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு பல வழிநடத்தல் குழுக்கள் அமைக்கப்பட்டு அரசியல் யாப்பு திருத்தம் அதனூடாக அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பலரின் மத்தியில் இருந்தது.

அதற்காக கடந்த ஆறுமாதங்களுக்கு முன் இடைக்கால அறிக்கையும் சமர்பிக்கப்பட்டது
ஆனால் எதுவுமே செயல்வடிவம் பெறவில்லை நல்லாட்சி அரசில் உள்ள கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களானாலும்சரி ஆழும் கட்சி அமைச்சர்களானாலும்சரி அரசியல் யாப்பு சம்மந்தமாகவோ அரசியல் தீர்வு சம்மந்தமாகவோ எந்த நல்லெண்ண நடவடிக்கையும் காட்டவில்லை மாறாக யாருக்காவது நம்பிக்கை இல்லா பிரேரணையை சமர்பிப்பதிலும் அவர்கள் தொடர்பாக விவாதிப்பதற்குமே காலத்தை வீணடிக்கின்றனர்.

ஏற்கனவே பிரதமர் ரணில்விக்கிரமசிங்கா வுக்கு எதிராக கொண்டுவந்து பாராளுமன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பு நடாத்தி அந்த பிரேரணை தோல்வி கண்ட நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் ஐயாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாபிரேரணை கொண்டுவர கங்கணம் கட்டி செயல்படுகின்றனர்.

இதுபோலவே சில அமைச்சர்களுக்கு எதிராகவும் நம்பிக்கை இல்லாபிரேரணை கொண்டுவருவதாக கூறப்பட்ட கதைகளையும் நாம் அறிவோம் இந்த நம்பிக்கை இல்லாபிரேரணைகளை ஆராய்ந்து நோக்கும்போது தமிழ்மக்களின் இனப்பிரச்சனையை தீர்பதற்கு ஒன்றுபடாத இந்த சிங்களத்தலைமைகள் நம்பிக்கை இல்லாபிரேரணைக்குமட்டும் ஒற்றுமையுடன்
செயலாற்றுவதையும் அதற்காக அக்கறை காட்டுவதையும் கவனிக்கமுடிகிறது.

இதில் இருந்து ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும் பாராளுமன்றத்தேர்தல் இடம்பெற இன்னும் இரண்டுவருடங்கள் மட்டும் ஜனாதிபதிதேர்தல் இடம்பெற இன்னும் ஒருவருடங்கள் இருக்கும் நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகளை கிடப்பில் போட்டுவிட்டு அதற்கிடையில் உள்ள காலத்தை கடத்துவதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் என்ற வெடிக்காத குண்டுகளை போட்டு காலத்தை கடத்தி அடுத்ததேர்தலில் எப்படி வெற்றிபெறவேண்டும் என்ற இலக்கை மட்டும் நோக்காக்க்கொண்டு அனைத்து பேரினவாத கட்சி தலைவர்களும் செயல்படுகிறார்கள் என்பதையே இவர்களின் நடவடிக்கைகள் கோடிட்டுக்காட்டுகிறது.

தற்போது எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் ஐயாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாபிரேரணை என்ற நாடகமும் அரசியல் தீர்வை இல்லாமல் செய்யும் ஒரு சதிமுயற்சி என்பதை இலகுவாகபுரிந்து கொள்ள முடியும் நிட்சயமாக எதிர்கட்சி தலைவர் சம்மந்தன் ஐயாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லாபிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பித்தால் அது இலங்கை அரசின் உச்ச இனவாதசெயல்பாடு என்பதை சர்வதேசம் புரிந்துகொள்ளவேண்டும் என பா.அரியநேத்திரன் இவ்விடத்தில் குறிப்பிட்டிருந்தார்.