மாங்காட்டில் கோரவிபத்து ஒருவர் பலி

0
496

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மாங்காட்டில் இடம் பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

ஓந்தாச்சிமடத்தில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேனும் குருணாகல் இருந்து கோழியேற்றி கொண்டு கல்முனையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கென்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோத்தியதனாலேயே குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை 1.30 மணியளவிலையே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது.

கோழியேற்றி வந்த கென்ரர் வாகனம் வேன் பயணித்துக் கொண்டிருந்த பக்கத்தை நோக்கி சென்று வேனில் மோதியுள்ளது. இதனையடுத்து வேன் வீதியில் நின்ற மின்கம்பத்தில் மோதி குடைசாய்ந்ததனால் மின்கம்பம் முறிந்து வேனின் மேல் விழுந்துள்ளமையே விபத்திற்கான காரணமென அறியமுடிகின்றது.

வேனில் பயணித்து கொண்டிருந்த மூவரில் ஒருவர் காந்தன் வயசு 30 என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும், கென்ரரில் பயணித்த சாரதி உட்பட இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி வைத்தியசாலைகளில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேனில் இருந்தவர்களை கிராம மக்களே வாகனத்ததை உடைத்து வெளியேற்றியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்…பழுகாமம் நிருபர்