உள்ளுராட்சி சபைகள் சேகரித்த நிதியை செலவு செய்யாமல், வேறு வழிகளில் நிதியை தேடி திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்.

0
382

கடந்த காலத்தில் சேகரித்து வைத்த நிதியை செலவு செய்தல் என்பது ஒரு சபைக்கான ஆரோக்கியமான திட்டமல்ல. மக்கள் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில் பிரதேசத்திற்கான திட்டங்களை தயாரித்து, நிதி நிறுவனங்களிடம் நாடி நிதியைக் கண்டுபிடித்து வேலைகளை அமுலாக்குவதற்குரிய கொள்கைத்திட்டங்களை வகுப்பதே சிறப்பான செயல் திட்டமாகும். என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் உள்ள+ராட்சி சபை ஊடாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிடுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள+ராட்சி சபையைப் பொறுத்தவரையில் 12 உள்ள+ராட்சி சபைகள் உள்ளன. இதில் மாநகரசபை-1, நகரசபை-2, பிரதேசசபை-9 இச்சபைகளில் மொத்தமாக 274 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவ் உள்ள+ராட்சி சபைகளில் 251மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். வட்டரா ரீதியாக 146பேரும், இரட்டைத் தொகுதி இரண்டு (களுவாஞ்சிக்குடி, வாகரை) விகிதாசாரர ரீதியாக 92 பேரும், தொங்குநிலை பிரதிநிதிகளாக 13 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட அனைவரும் மக்களுக்கு தம்மால் இயன்ற உச்சக்கட்ட சேவைகளை செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகின்றேன், பாராட்டுகின்றேன்.

கடந்த காலத்தில் இப்பிரதிநிதிகளில் பலர் முழுநேர சமூகசேவைகளையும், சிலர் பகுதிநேர சமூகசேவைகளையும் ஆற்றி வந்ததோடு, ஒருசில பிரதிநிதிகள் வேலைப்பழு காரணமாக சமூகசேவைகளில் ஈடுபடவில்லை என தெரியவருகிறது. இருந்தாலும் முதல்வர், பிரதிமுதல்வர், தவிசாளர், பிரதிதவிசாளர், உறுப்பினர்கள், குழுத்தலைவர்கள், குழுஉறுப்பினர்கள் சமூகத்திற்காக சேவை செய்வதற்காக போட்டி போட்டு வலுச்சேர்ப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றன. இவர்கள் ஆர்வத்தோடு வேலை செய்ய முயற்சிப்பது அவர்களுடைய அர்பணிப்பையும், திறமையையும் வெளிக்காட்டி நிற்கின்றன. சில சபைகளில் நிதிப்பற்றாக்குறை காரணமாக பல வேலைகள் ஆரம்பிக்க முடியாமல் கிடப்பில் விடப்பட்டிருப்பது கவலைக்குரியது. ஆனால் இத்தருணத்தில் ஒவ்வொரு சபைக்குரிய ஆணையாளர், பிரதி ஆணையாளர், பொறியியலாளர்கள், செயலாளர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள்,நிருவாக உத்தியோகத்தர்கள், கணக்காளர்கள், மேற்பார்வையாளர்கள், சிற்றூழியர்கள், சுகாதாரத்தொழிலாளிகள், சுகாதார உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ள+ராட்சி சபைகளிலும் பொருளாதார க~;ரத்திற்கு மத்தியில் நின்று பிடித்து துவண்டு போகாமல் நம்பிக்கையுடன் ஒவ்வொரு உள்ள+ராட்சி சபைகளையும் முதன்மைப்படுத்தி அர்ப்பணிப்புடன் செயற்பட்டு ஒவ்வொரு சபைகளையும் முன்னேற்றகரமாக பாராட்டுமளவிற்கு வைத்த பெருமை மேற் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உத்தியோகத்தர்களையும், ஊழியர்களையும் சேரும் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது. ஒவ்வொரு உள்ள+ராட்சி சபைகளிலும் ஒவ்வொரு உத்தியோகத்தரும், ஊழியர்களும் வியர்வை சிந்தியே முன்னேற்றகரமாக உள்ள+ராட்சி சபைகளை மாற்றியதே வரலாறாகும்.

பல சபைகளில் நிதியை சிக்கனமாக சேமித்து நிரந்தர வைப்பில் இடப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. இது வரியிறுப்பாளர்களின் வரிப்பணமாகும். இதை வீண்விரயம் செய்யலாகாது. வீண்விரயம் செய்வதற்கு அனுமதிக்கவும் முடியாது.

சபைக்கு தேவையான நிதிகளை நிறுவனங்கள், மாகாணஅரசு, மத்தியஅரசு, வரிஅறவீடுகள், வெளிநாடுகள் ஊடாகப் நிதியைப் பெற்று அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்க வேண்டும். கடந்த காலத்தில் சேகரித்து வைத்த நிதியை செலவு செய்தல் என்பது ஒரு சபைக்கான ஆரோக்கியமான திட்டமல்ல. மக்கள் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில் பிரதேசத்திற்கான திட்டங்களை தயாரித்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிதி நிறுவனங்களிடம் நாடி நிதியைக் கண்டுபிடித்து வேலைகளை அமுலாக்குவதற்குரிய கொள்கைத்திட்டங்களை வகுப்பதே சிறப்பான செயல் திட்டமாகும். இச் சிறப்பான செயற் திட்டங்களை மக்கள் பிரதிநிதிகள் தயாரிக்க முடுக்கி விடப்பட்டுள்ளதை பாராட்டுகின்றேன். ஒரு சிலர் நிருவாகங்களில் தலையிடுவதென்பது ஏற்புடையதல்ல.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018ம் ஆண்டு ஜனநாயக தேர்தல் ரீதியாக மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கிய சபைகள் வருட முடிவில் இலங்கையிலும், மாகாணத்திலும், மாவட்டத்திலும் முதன்மை நிலைச் சபையாக கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதிகள் உழைப்பார்கள் என நம்புகின்றேன். அப்படி உழைக்க வேண்டுமென மக்கள் விரும்புகின்றார்கள்.

எது நடக்கின்றதோ? இல்லையோ நிதி இல்லாமல் மக்கள் சேவையை முன்னெடுக்க முடியாது எனவே நிதி வருமானத்தை அதிகரிக்க சிறப்பான வேலைத்திட்டங்களை புத்திசாதூரியமாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.