மாவடிமுன்மாரியில் பாரம்பரிய விளையாட்டு

0
663

(படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாவடிமுன்மாரி செந்தழல் விளையாட்டுக்கழகத்தின் சித்திரைப்புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் மாவடிமுன்மாரியில் இடம்பெற்றன.

இதன்போது, மாவூதி காசெடுத்தல், வழுக்குமரம் ஏறுதல், கண்கட்டி முட்டி உடைத்தல், முட்டை மாற்றுதல், மெதுவான சைக்கிள், மோட்டார் சைக்கிள் ஓட்டம், பலூன் உடைத்தல், கிடுகு இழைத்தல், பாற்சோறு உண்ணுதல், ஊசியில் நூல் கோர்த்தல், தலையணைச்சமர் போன்ற பல்வேறு விளையாட்டுக்களும் நடைபெற்றன.