சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர்கள் 15 பேர் காயம்.

0
824

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

40 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்,  சூரிச்சின் வட பகுதியில், அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில், இரண்டு கனரக வாகனங்களுடன் மோதியுள்ளதாக சூரிச் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று (18)  பிற்பகல் 3.15க்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Photos 20 minuten