மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை பிரதி தவிசாளர் திருமதி ரஞ்சினி கனகராசாவின் எதிர்கால திட்டங்கள்

0
1153
பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை கருத்திலெடுத்து அவற்றினை தீர்ப்பதற்கான நடவடிககைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை பிரதி தவிசாளர் திருமதி ரஞ்சினி கனகராசா அவர்கள் தெரிவித்தார்.

பெண்களின் குரலும் அரசியலூடாக ஒலிக்க வேண்டும் எனும் அடிப்படையில் நீங்கள் இப் பிரதேச சபைக்கு பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் அந்த வகையில் பிரதேச சபை ஊடாக முன்னெடுக்கவுள்ள எதிர்கால செயற்பாடு தொடர்பாக வினாவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
தற்காலத்தில் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்கள் மிகவும் கஸ்ரமானதோர் நிலையினை எட்டியுள்ளனர். இந் நிலையில் எமது சமூகத்தில் அவர்கள் பலதரப்பட்ட தொல்லைகளை அனுபவித்தவர்களாக உள்ளனர். பல குடும்பங்களை கடன் தொல்லைகள் வாட்டிக்கொண்டு இருக்கின்றது. இதன் தமது குழந்தைகளின் கல்வியினை இடை நடுவில் விடவேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. இந் நிலமையை மாற்றியமைக்க வேண்டும் அவ்வாறான அனைத்து குடும்பங்களும் தனது சொந்தக்காலில் நிற்பதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் நாங்கள் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எமது பிரதேசத்தின் குறை நிறைகளை கண்டறிந்து அவற்றினை
சம்பந்தப்பட்டவர்களிடம்  சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்துவைப்பதே எமது கடமையாகும். அதற்காகவே எம்மை மக்கள் இந்த ஆசனத்தில் அமர்த்தியுள்ளனர். எனவே மக்களின் குறைகளை தீர்த்து வைக்கும் பொருட்டு எந்நேரமும் எமவருடனும் பேசுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.
எமது பிரதேசத்தின் அனைத்து கிராமங்களும் தற்போது நகரமயமாகிக் கொண்டு வருகின்றது. இதனால் அனைவரும் ஒரு இயந்திரமான வாழ்க்கையை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கின்றனர். இதன் காரணமாக பல கிராமங்கள் கிராமத்தின் தூய்மையை  இழந்து வருகின்றது. இதனை அவ்வாறே நாங்கள் விடமுடியாது காரணம் இதனால் பலதரப்பட்ட நோய்தாக்கங்களுக்ககு உள்ளாகவேண்டிய ஒரு சூழ்நிலை தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே எதிர்காலததில் அவற்றினை தடுப்பதற்கான வழிவகைகளை கண்டறித்து அவற்றினை தடுக்கவேண்டும். அவ்வாறு தடுப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில்  நோயற்ற சுத்தமான சமூகத்தினையும்,சூழலையும் நாங்கள் உருவாக்க முடியும்  எனவே இதற்கான ஒத்துழைப்பினை திணைக்களம் சார் உத்தியோகத்தர்கள், பெதுமக்கள் எனபலரும் வழங்கவேண்டும் என இதன்போது தெரிவித்தார்…
.