பட்டிருப்பு மிருக வைத்தியசாலை வளாகத்தில் டெங்கு பிரதேச செயலக இடர்கால அவசர குழுவினர்சிரமதானம்

0
914
டெங்கு நுளம்புபரவும் இடமாக பிரகடண படுததப்பட்ட பட்டிருப்பு மிருக வைத்தியசாலை வளாகத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக இடர்கால அவசர குழுவினர் நேற்று சிரமதான பணியொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் குறித்த சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த வாரம் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட டெங்கொழிப்பு சோதனை நடவடிக்கையின் போது குறித்த அலுவலக வளாகமானது டெங்கு பரவக்கூடிய இடமாக பிரகடணப்படுத்தப்பட்ட நிலையில் சிவப்பு அறிவித்தலும் வழங்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பகுதி நாள் கூட்டத்தில் தங்களின் அலுவலக வளாகத்தில் இவ்வாறானதோர் நிலை காணப்படுவதாகவும் அதனை சீர் செய்வதற்கு தங்களிடம் ஆளணி வளம் இல்லாதுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான மிருகவைத்திய அதிகாரி திருமதி ஜ.சதீஸ்காந் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்து பிரதேச செயலாளர் இந் நிலையனை  கருத்திற்கொண்டு பிரதேச செயலகத்தில் அனர்த்தங்களின் போது பொது மக்களுக்கு உதவுவதற்காக இடர்கால அவசர குழுவொன்றை நிறுவியுள்ளதாகவும் அக் குழுவினரை குறித்தபணியினை மேற்கொள்வதற்கு தந்துதவுவதாக அக் கூட்டத்தில் உறுதியளித்திருந்தார் இதற்கமைமாக அக்குழுவினர் குறித்த சிரமதான பணியினை முன்னெடுத்திருந்தனர்