இலங்கை கடற்பரப்பில் அபூர்வமான உயிரினம் ஒட்டிப் பிறந்த கடலாமை குட்டிகள்

0
239
ஒட்டிப் பிறந்த கடலாமை குட்டிகள் இரண்டு மாத்தறை மிரிஸ்ஸ கடற்கரையில் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கடலாமை குட்டிகளும் நேற்றைய தினம் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
வனவிலங்கு வரலாற்றில் இதுவரை ஒட்டிப் பிறந்த ஆமைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட கடலாமைகள் மிரிஸ்ஸ கடல் பாதுகாப்பு திணைக்களத்தினால் முன்னெடுக்கும் கடலாமைகள் பாதுகாப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இரண்டு கடலாமைகளும் சிறப்பான உடல் நிலையில் உள்ளதாக மிரிஸ்ஸ வனவிலங்கு அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தெற்கு கடல் எல்லையில் அதிகளவில் கடலாமைகள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.(JM)