மட்டக்களப்பில் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது

0
288

(டினேஸ்)

களுவாஞ்சிகுடி நியு ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் 52வது வருட நிறைவு விழாவும் கலை விழாவும் நேற்று மாலை நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக இராசமாணிக்கம் பவுண்டேசனின் தலைவர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டார்.

இதன்போது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கல்வி நிலையில் சாதனை படைத்தவர்களும் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் தனதுரையில்……

கடந்த ஆண்டைவிட இந்த வருடம் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக பாடசாலைகள் மட்டத்தில் சிறப்பு கற்பித்தல் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்வதற்கு அதன் அதிபர் ஆசிரியர்கள் வலயக்கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக என அவர் கருத்துத் தெரிவித்தார்.