காத்தான்குடி நபர் மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்ல அனுமதி கோரியுள்ளார்.

0
525
புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் வார உரைகல் பத்திரிரைகயின் பிரதம ஆசிரியருமான எம்.ஐ.றஹ்மத்துல்லாஹ் (புவி) இதற்கான அனுமதியை கோரியுள்ளார்.
 
இலங்கையிலிருந்து; இந்தியாவுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து மோட்டார் சைக்களில் புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு செல்வதற்கான அனுமதியை தருமாறு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதற்கான அனுமதியை கோரிய கோரிக்கை கடிதத்தினை அண்மையில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் காத்தான்குடியிலள்ள பிராந்திய அலுவலகத்தில் அதன் அலுவலக் பொறுப்பதிகாரி அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.ஜுனைட் நழீமியிடம் உத்தியோக பூர்வமாக ஒப்படைத்தார்.
 
தான் இலங்கையிலிருந்து மோட்டார் சைக்கிளுடன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று இந்தியாவிலிருந்து தரை வழியாக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் செல்வதற்காக நான் எண்ணியுள்ளேன்.
 
இதற்காக இலங்கை அரசாங்கம், மற்றும் சஊதி அரேபியா நாட்டு அரசாங்கம் அனுமதியை தரவேண்டும். ஹஜ்ஜுக்கான விண்ணப்பத்தினை கடந்த ஆண்டு ஒப்படைத்தேன்.
 
இதற்கான அனுமதியை முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தருவதுடன் ஆதரவினையும் வழங்க வேண்டும்.
 
இதற்கான அனுமதிகள் கிடைக்கும் பட்சத்தில் நான் இந்த புனித பயணத்தினை மேற் கொள்வேன்.
 
இந்தியாவிலிருந்து தரை வழியாக சுமார் 10000 கிலோ மீற்றர் பயணிக்க வேண்டும் என்றார்.
 
இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை வழிமார்க்கமாக செல்வதற்காக ஒருவர் அனுமதி கோரியிருப்பது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks
எம்.எஸ்.எம்.நூர்தீன்