பெண்ணொருவர் மேலாடையுடன் மட்டும் இலங்கையை வந்தடைந்த துயரச் சம்பவம்

0
228

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற பெண்ணொருவர், மேலாடையுடன் மட்டும் இலங்கையை வந்தடைந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குருணாகலை சேர்ந்த கண் தெரியாத 58 வயதுடைய பணிப்பெண் ஒருவருக்கு, மேல் ஆடை ஒன்று மாத்திரம் அணிவித்து சவுதியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.குருணாகலை, பிலிஸ்ஸ மடுவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே மீண்டும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு சேவை அலுவலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

10 வருடங்களாக சவுதியில் பணிப்பெண்ணான சேவை செய்த அந்த பெண்ணின் சம்பளம் அல்லது சொத்துக்கள் இன்றி சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை தூதரகத்தினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அபாயா எனப்படும் மேல் ஆடை மாத்திரம் அணிவித்து இலங்கைக்கு அனுப்புவதற்கு சவுதிக்கான இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுமார் 40 வருடங்களாக குவைத் நாட்டில் பணியாற்றி வந்த இலங்கைப் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் இவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான இந்த பெண்மணியே 40 வருடங்களுக்குப் பின் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.இவரை வரவேற்பதற்கும், அழைத்துச் செல்லவும் அவருடைய குடும்பத்தார் யாரும் விமான நிலையத்திற்கு வந்திருக்கவில்லை.

இதனால் சமூக சேவை திணைக்களத்தால் நிர்வகிக்கப்படுகின்ற செத் செவன முதியோர் இல்லத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் இவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.(NL)