மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு

0
247

மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விஷேட பிரார்த்தனையும், கலை நிகழ்வும் நேற்று மாலை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

சிறந்ததொரு உலகை உருவாக்குதல் எனும் அபிலாஷையின் அங்கமாக இந்த ஆன்மீக பணி பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் அனுசரணையுடன் சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

இந்நிகழ்வில் ஆசிய பசுபிக் பிராந்திய பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் பொறுப்பாளரும், கியான் சரோவரின் பணிப்பாளருமான டாக்டர்.நிர்மலா கஜாரியா கலந்து கொண்டு ஆன்மீக உரையினை வழங்கினார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் உள்ளிட்ட அரச திணைக்கள் அதிகாரிகள், தொழிலதிபர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பொது மக்களும் கலந்து கொண்டதுடன், இங்கு ஆன்மீக உரை, தியானம், பட்டிமன்றம், நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.