கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி முகாமையாளருக்கு பதவி உயர்வு : புதிய முகாமையாளரும் பதவியேற்பு.

0
1754

கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கியில் முகாமையாளராக கடமையாற்றிய மா.மோகனதாஸ் உதவி பிராந்திய முகாமையாளராக வன்னிப்பிரதேசத்திற்கு பதவியுர்வுபெற்றுச்சென்றுள்ளார். அதேவேளை கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கிக் கிளையின் புதிய முகாமையாளராக சலோஜன் கிருஸ்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வங்கி கிளையின் புதுவருட கொடுக்கல் வாங்கல் நிகழ்வு இன்று(16) திங்கட்கிழமை காலை புதிய முகாமையாளரின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய குரு வ.சோதிலிங்ககுருக்களின் ஆசியுரை நடைபெற்றதுடன், ஊழியர்கள் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டனர். புதுவருடத்திற்கான முதல் பணவைப்பினை கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையினர் தமது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு ஆரம்பித்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொடுக்கல், வாங்கல் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு பணவைப்புகளுக்கேற்ப பரிசில்களும், இனிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டன.