விபத்தில் தந்தை, தாய் இரு பிள்ளைகள் உயிரிழப்பு

0
486
MELAKA 10 NOVEMBER 2017. ( MM993R ) Keadaan kereta jenis Proton FLX dan sebuah bas ketika kemalangan yang melibatkan lima buah kenderaan di Jalan Pulau Gadong. NSTP/ RASUL AZLI SAMAD

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பலாந்தோட்டை மிரிஜ்ஜவல சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் பஸ் வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருமே உயிரிழந்துள்ளனர்.

ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த, தந்தை, தாய், மற்றும் அவர்களது ஒரு வயது மற்றும் 8 வயது இரு பிள்ளைகள் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பஸ்ஸுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ் சாரதிக்கோ, பயணிகளுக்ககோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பஸ்ஸின் சாரதி ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்(DC)