ஆபாச போட்டோக்களும் ஆபத்துக்களும் . Ledchumi.

0
410

இந்த Digital உலகில் இன்று பலதரப்பட்ட பிரச்சனைகள் உள்ளன அவற்றுள் மிகமுக்கியமானது பெண்களின் ஆபாச படங்கள் அடிக்கடி வெளிவருவதும் அதனால் உருவாகும் சிக்கல்களும்.

.இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு இந்த ஆபாச புகைப்படங்கள் வெளிவருகின்றன ஆம் இவை தானாக வெளிவரும் ஒன்று அல்ல நாம் ஏதோ ஒருவிதத்தில் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே வருவதாகும் அவை எவ்வாறு ஏற்படுகின்றன என்று பார்த்தால்

01) காதல் – ஆம் இன்று ஒரு ஆணும் பெண்ணும் காதலில் விழுவது சர்வசாதாரணமாக போய்விட்டது இவ்வாறு இளவயதிலேயே காதலில் இணைவார்கள் தாம் பேசிக்கொள்ள இப்போ கடிதத்தை தவிர பல நவீன வழிகள் உள்ளன அவ்வாறு பேசிப்பழகும் போது காதலின் அடுத்தநிலை காமம் இது தவிர்க்கமுடியாதது இதன்போது Chatting பண்ணும்போது ஆண் பெண்ணின் படங்களை பதிவிட சொல்வதும் பின் ஆடை இல்லாத நிலையில் படங்களை பதிவேற்ற சொல்வதும் இடம்பெறுகின்றது பெண்கள் ஆரம்பத்தில் இதில் உடன்பாடு இல்லாவிடினும் காதலின் ஆழமும் ஆணின் மேல் உள்ள நம்பிக்கையும் ஆடை இல்லாத நிலையில் கூட போட்டோக்களை பதிவேற்ற வைக்கிறது.

02) இன்று சமூக வலைத்தளங்கள் நிறையவே உள்ளன அதில் உள்ளவர்கள் தங்கள் பதிவுகளுக்கு Like comment வருவதில்லை  என்று ஏங்கும் சிலர் உள்ளனர் அப்படியான பெண்களை குறிவைத்து பல கும்பல்கள் வலம்வருகின்றன இவ்வாறானவர்கள் சில பெண்களின் பதிவுகளுக்கும் போட்டோக்களும் Like பண்ணி நல்ல முறையில் Comment பண்ணுகிறார்கள் அப்போது பெண்களின் இயல்பு வெளிப்பட்டு இவர்களும் பதில் comment பண்ணுகிறார்கள் இவ்வாறு போகும் சம்பாஷணை Inbox கு மாறுகிறது நட்பு வளர்கிறது எதுக்காக நட்பை ஏட்படுத்தினார்களோ அவர்கள் அதை அடையும் வண்ணம் chatting ஐ கொண்டு சென்று நட்பு எதையும் செய்யுமளவுக்கு வருகிறது இறுதியில் ஆடை இல்லா படங்களும் பரிமாறப்படுகின்றன.

03) கணவன்மார் வெளிநாட்டில் உள்ளவர்கள் தாங்கள் மனைவிமாருடன் பேசிக்கொள்ள சமூக வலைத்தளங்களை உருவாக்கி கொடுத்துள்ளார்கள் ஆனாலும் அதில் இங்குள்ள மனைவி அல்லது குடும்ப போட்டோக்களை பார்ப்பவர்கள் அதுக்கு Request பண்ணுகிறார்கள் இவர்களும் அதை ஏற்றுக்கொண்டு இருக்கும் போது அடிக்கடி chatting தகவல்கள் வருவதால் அதற்கு பதிலளிப்போமே என்று போய் அதுவே நாளடைவில் பல போட்டோக்களை பரிமாறும் அளவுக்கு கொண்டு செல்கிறது.

04) அநேக பெண்கள் அதுகும் வெளிநாட்டில் கணவன் உள்ள பெண்கள் தொலைபேசிகளை வாங்கி வாங்கும் கடைகளில் அதில் FaceBook Messanger போன்றவற்றை போட்டு தருமாறு கேட்கின்றனர் இதன்போது இவர்களின் FaceBook Messanger Password என்பவற்றை  கடைக்காரர்கள் எழுதி வைக்கின்றனர் பின்னர் கடைக்காரர்கள் உல் நுழைந்து கணவன் மனைவிகளுக்கும் நடந்த chatting போட்டோக்களை பதிவிறக்கம் செய்கின்றனர்.

05)வீட்டில் கணவன் மனைவி தங்களையோ மற்றவர்களையோ சும்மா போட்டோ எடுத்து பார்ப்பதுண்டு பார்த்துவிட்டு போனில் அழித்து விடுவோம் ஒருவேளை நம் தொலைபேசி பழுதடைந்து பழுதுபார்க்கும் இடத்தில் கொடுத்தால் அவர்களிடம் அளித்த போட்டோக்களை திரும்பப்பெறும் (Recovery Software ) மென்பொருள் இருக்கும் அதில் போட்டு அனைத்து படங்களையும் மீள பெற்று கொள்வார்கள் அநேகர் பெண்களின் தொலைபேசி எனில் முதலில் செய்வது இதையே.

06)சிலவேளை திடீரென சமூக வலைத்தளங்கள் செயல்படாமல் போனால் உதவிக்கு தெரிந்தவர்களிடம் சரி செய்ய PassWord கொடுப்போம் பின்னர் நாம் மாற்றாமல் விடுவது அதை வைத்திருந்து நம் தனிப்பட்ட chatting தகவல்கள் போட்டோக்களை எடுப்பது

07) Fake ID கள் பல ஆண்கள் பெண்கள் புகைப்படங்களுடன் பெண் பெயர்களில் உலாவருகிறார்கள் இவர்களுடன் உங்களுக்கு தொடர்புகள் ஏற்படுமாயின் அது நாளடைவில் வாங்கிய உடை செருப்பு தொடர்பாக சாட்டிங் போய் வாங்கிய உள்ளாடைகளைக்கூடி போட்டோ எடுத்து அனுப்பியும் போட்டுகொண்டு போட்டோ எடுத்து அனுப்பியும் சிக்கலில் மாட்டி கொள்கின்றனர்.

08) அதோடு நாம் பாவிக்கும் viber whatsap IMO போன்ற மென்பொருட்களில் பதிவிடும் போட்டோக்கள் நாம் அழித்தாலும் பல ஆண்டுகள் அவர்கள் main server இல் இருக்கும் சில வேலை அவர்களே அதை வெளியிடவோ அல்லது வேறு யாரோ. அதை ஹக் செய்தோ புகைப்படங்களை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறாக பெறப்படும் புகைப்படங்கள் காதல் முறிவடையும் போதோ அல்லது நட்பு முறிவடையும் போதோ அல்லது உங்கள் தொலைபேசிகளில் இருந்து பெறப்பட்ட போட்டோக்கள் அவர்களுக்கு தேவை ஏற்படும் போதோ வெளிவருகின்றன அல்லது இவற்றை வைத்து பெண்களை மிரட்டலுக்கு உள்ளாக்கி  தங்கள் காரியங்களை முடித்து கொள்கின்றனர்.

பெண்களே நீங்கள் ஆண்களுக்கு சமனாக சமஉரிமை கேப்பது ஆண்கள் செய்யும் அனைத்தையும் செய்ய எத்தனிப்பது எல்லாம் நல்லது ஆனால் அதேநேரம் பிரச்சனைகள் எழுந்தால் அதை துணிந்து எதிர்கொள்ளும் மனநிலையை நீங்கள் இன்னும் அடையவில்லை அந்த வகையில் நீங்கள் இன்னும் நம் பாரம்பரியத்திலேயே உள்ளீர்கள் எல்லா உரிமைகளையும் நீங்கள் பெறவேண்டுமானால் முதலில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள் .

ஏனெனில் சமூகத்துக்குள் வந்தால் சமூக பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பெண்களே ஆசை வார்த்தைகள், சாதகமான Comment கள் ,வெற்று Like ,Sister ,Madam என்று வரும் வார்த்தைகளில் மயங்காதீர்கள் பின்னர் மயக்கம் தெளியாமலே போகவேண்டி வரும்.

நீங்கள் ஒரு சிறந்த பெண் ஆயின் குடும்ப பெண் ஆயின் சமூக வலைத்தளங்களை பாவித்தால் என்ன நடைபெறுகிறது என்று பார்வை இடுங்கள் அதை விடுத்து Chatting Comments என்று போகவேண்டிய அவசியம் ஒரு சிறந்த பெண்ணுக்கு தேவைப்படாது அப்படி போனால் அது தொடர்பாக வரும் பிரச்சனைகளை துணிந்து முகம் கொடுங்கள் உயிரை விடாதீர்கள்.மொத்தத்தில் அந்தரங்க போட்டோக்களை எந்த சந்தர்ப்பத்திலும் பதிவிடாதீர்கள்.

Ledchumi.