அம்பாறையில்கிணற்றில் விழுந்த யானை குட்டியின் நெகிழ்ச்சி காணொளி

0
375

இலங்கையின் நீர் அருந்த சென்று கிணற்றில் விழுந்த யானை குட்டியின் நெகிழ்ச்சி காணொளி ஒன்றை சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

அம்பாறையில் இந்த சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது.6 அடி கிணறு ஒன்றுக்குள் இந்த 4 மாத யானைக்குட்டி விழுந்து கிடப்பதனை அந்த பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவை அழைத்த பிரதேச மக்கள் குறித்த யானைக்குட்டியை கிணற்றில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டுள்ளனர்.எப்படியிருப்பினும் யானைக்குட்டியின் தாய் அருகிலேயே இருந்தமையினால் அதனை மீட்பதற்கு கடினமாகியுள்ளது.

இதனால், தாய் யானையை முதலில் அங்கிருந்து அனுப்பிய பின்னரே இந்த யானைக்குட்டியை மீட்க முடிந்துள்ளது.கிணற்றினை உடைத்து யானைக் குட்டியை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.சுமார் 5 மணித்தியாலங்கள் போராடி இந்த யானைக்குட்டி மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யானைக்குட்டி வெற்றிகரமாக மீட்கப்பட்டதனை தொடர்ந்து அதனை அங்கிருந்து கூட்டி சென்றுள்ளது.