ஜப்பானுடன் நெருக்கமடையும் சுவிட்சர்லாந்து

0
238

டோக்கியோவில் சுவிட்சர்லாந்து ஜனாதிபதி Alain Berset  மற்றும் ஜப்பான் பிரதமர் Shinzo Abe ஆகியோருக்கு இடையேயான சந்திப்பில், ஸ்விஸ் தேசிய விஞ்ஞான பவுண்டேசனுக்கும் அதன் ஜப்பானிய பங்காளிக்கும் இடையில், ஒத்துழைப்பை பலப்படுத்தும் ஆவணத்தில் சுவிட்சர்லாந்து கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தம் இருதரப்பு விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு வழிவகுக்கும் என்று சுவிஸ் அரசு கூறியது. நோயாளிகள் பாதுகாப்பிற்கான உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் Berset , பல்வேறு நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளார்.

Berset மற்றும் Abeக்கு இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள், இரு நாடுகளுக்கு இடையே 2009 முதல் இருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை (FTA) நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வழிகளையும் கண்டன.