யாழில் இளைஞர்களை மையமாகக்கொண்டு சுதேசிய மக்கள் கட்சி உதயமானது.

0
292

இளைஞர்களை மையமாக கொண்டு இன்று (15/04/2018) சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வுகள் மாலை 4:00 மணியளவில் கட்சியின் ஒருங்கினைப்பாளரும், செயளாலருமான சந்தானகோபால் மதிராஜ் தலைமையில் நல்லூரில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் செயல்குழு உறுப்பிர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன்
தலைவராக− அரியநாயகம் ரஞ்சித்
உபதலைவராக குஞ்சித்தம்பி தினேஸ்
பொருளாளராக விவேகானந்தா புவிசன் கொள்கை பரப்பு செயளாளராக அமிர்தலிங்கம் மதுசனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன்போது ஒவ்வொரு தமிழ்மக்களின் நலனுகாகவும் தம் தனிப்பட்ட விருப்பு வெருப்புக்களை கடந்து மக்களுடன் மக்களால் சுதேசிய மக்கள் கட்சி செயல்ப்படும் என்றும் அதற்காக அனைவரும் ஒன்றுபட பாடுபடுவோம் என சபதம் எடுத்துக்கொண்டு
இவ் உயரிய மக்கள் சேவைக்காக அனைவரையும் அணிதிரளுமாறும் அது காலத்தின் இப்போதய தேவை எனவும் தலைமை ஒருங்கினைப்பாளரும் செயளாளருமான ச.மதிராஜ் இதன்போது இளைஞர்களிற்கு அழைப்பு விடுத்தார்.

இந் நிகழ்வில் இளைஞர்கள், சமூகஆர்வளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.