இரா.சம்பந்தனும் ,சீ.வீ.விக்னேஸ்வரனும் மனம் விட்டு பேசவேண்டும்.யாழில் மனோ

0
471

தமிழ் மக்களின் நலன் கருதி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரனும் மனம் விட்டு பேசவேண்டுமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வா போன்றவர்கள் அஹிம்சை வழியிலும், புலிகள் ஆயுத வழியிலும் போராடியதைப் போன்று, தற்போது சம்பந்தன் சர்வதேச ஆதரவுடன் தமிழர்களுக்காக போராடி வருகின்றார் என்றும் மனோ குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் மனோ, யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்களிடையே, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை காணப்படுவதாகவும், அது ஆபத்தானதெனவும் மனோ குறிப்பிட்டார். யாழில் காணப்படும் வளங்கள் சரியாக பயன்படுத்தப்படாமை இதற்கு முக்கிய காதரணமென அவர் சுட்டிக்காட்டினார். அதனால் அபிவிருத்தியில் யாழ்ப்பாணம் பின்னடைவை சந்தித்துள்ளதென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அபிவிருத்தியையும் அரசியல் உரிமையையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாதெனக் குறிப்பிட்ட அமைச்சர் மனோ, ரவிராஜ் பாணியில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்களிடம் தான் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டள்ளார்.