மட்டக்களப்பு வாகரையில் புத்தாண்டு கைகலப்பு ஒருவர் சாவு.5 வயதுடைய குழந்தைக்கும் காயம்.

0
634

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கட்டுமுறிவில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்த்தர் மண்வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 5 வயதுடைய பெண்பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதற்போது இராசைய்யா சவுந்தராஜன் வயது (32) என்பவரே மரணமடைந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மது போதையில் காணப்பட்ட இருவர்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பாகி பின்னர் கோஸ்டி மோதலாக மாறியது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மரணமடைந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.